சல்மான் கான் மற்றும் ஷில்பா ஷீட்டி மீது போலீசில் புகார் !

Bookmark and Share

சல்மான் கான் மற்றும் ஷில்பா ஷீட்டி மீது போலீசில் புகார் !

இந்தி நடிகர் சல்மான்கான் நடித்த ‘டைகர் ஜிந்தா ஹை’ படம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. முன்னதாக இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் நடிகர் சல்மான்கான் கலந்து கொண்டு பேசினார். அப்போது குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை காயப்படுத்தும் விதத்தில் அவர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால், அந்த சமுதாய மக்கள் மும்பை பாந்திராவில் உள்ள சல்மான்கானின் வீட்டின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசியல் கட்சியினரை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். நடிகர் சல்மான்கான் தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

இதேபோல், நடிகை ஷில்பா ஷெட்டியும் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய போது, சாதி உணர்வை காயப்படுத்தும் விதத்தில் பேசியதாக கூறப்படுகிறது.ஆகையால், சல்மான்கான் மற்றும் ஷில்பா ஷெட்டி மீது நடவடிக்கை எடுக்குமாறு மும்பை அந்தேரி போலீஸ் நிலையத்தில் ரோஜ்கர் அகாரி இந்திய குடியரசு கட்சி பொது செயலாளர் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions