மான் வேட்டை வழக்கு: நேரில் ஆஜராவதில் இருந்து சல்மான் கானுக்கு விலக்கு

Bookmark and Share

மான் வேட்டை வழக்கு: நேரில் ஆஜராவதில் இருந்து சல்மான் கானுக்கு விலக்கு

பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 1998-ம் ஆண்டு, ‘ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கன்கானி என்ற கிராமத்துக்கு சென்றிருந்தார். 

அப்போது அவர் தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ இன கருப்பு மானை வேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருடன் படப்பிடிப்புக்கு சென்றிருந்த நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டவர்களும் இந்த வழக்கில் சிக்கினர்.

இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், சல்மான் கானுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதித்து 10-4-2006 அன்று தீர்ப்பளித்தது.

தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கடந்த 2007-ம் ஆண்டு சல்மான் கான் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த ஜோத்பூர் மாவட்ட விரைவு நீதிமன்றம் நடிகர் சல்மான்கானின் 5 ஆண்டு கால ஜெயில் தண்டனையை உறுதி செய்தது.

இதனால் அவர் ஜோத்பூர் போலீசாரிடம் சரண் அடைந்தார். 2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் 6 நாட்கள் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது. பின்னர், சிறையில் இருந்து அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் நேற்று (25-ம் தேதி) நேரில் ஆஜராகும்படி ஜோத்பூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சல்மான் கான் உள்ளிட்டவர்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையே, குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி, கண்காணிக்க வேண்டி இருப்பதால் நேற்று ஜோத்பூர் நகருக்கு வரும் சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்திருந்தனர்.

இதேபோல், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சல்மான் கான், நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டவர்கள் இந்த வழக்கின் விசாரணையின்போது நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் சார்பில் இன்றைய விசாரணையின்போது ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, இவ்வழக்கின் விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்த மாஜிஸ்திரேட் ஜோத்பூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் தல்பத் சிங் ராஜ்புரோஹித், அடுத்தகட்ட விசாரணையின்போது நடிகர் சல்மான் கான், நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டவர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட்டுள்ளார்.


Post your comment





Related News
ரெயில் நிலையத்தில் சேதம் ஏற்படுத்தியதாக ஷாருக்கான் மீது போலீஸ் வழக்கு
ஏ.ஆர். ரஹ்மான், ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய அமிதாப் பச்சன்! மாஸ் சாதனை
Raees பட பிரச்சனையால் ஷாருக்கான் மீது வழக்கு
சூர்யா, ஷாருக் பற்றிய செய்தி வெறும் வதந்தியா?
பாகுபலி-2! கவுரவ தோற்றத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார்
இது சாதரண செஃல்பி இல்லை, இதற்கு பின் ஒழிந்திருக்கும் பல வருட கதை இது தான்
மூணு நாளைக்குள்ள சிசிடிவி பதிவை மக்களிடம் காட்டு-கர்ஜிக்கும் மன்சூர் !
பார்ரா..மீண்டும் சல்மானிடமேவா?: கத்ரீனாவின் சமத்தை பார்த்து வியக்கும் பாலிவுட்
50 நாட்களை கடந்து அமிர்கானின் தங்கல் சாதனை!
விஜய்யுடன் நடனமாடிய நடிகை, இரண்டு வாரமாக கோமாவில் இருந்த பரிதாபம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions