சல்மான் கான் பட இயக்குனரை பாகிஸ்தானில் முற்றுகையிட்டு தாக்க முயற்சி!

Bookmark and Share

சல்மான் கான் பட இயக்குனரை பாகிஸ்தானில் முற்றுகையிட்டு தாக்க முயற்சி!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான பஜ்ரங்கி பாய்ஜான் படத்தை கபீர் கான் என்பவர் இயக்கியிருந்தார். சல்மான் நடித்த இந்த படம் இந்தியாவில் மட்டும் அல்லாமல் பாகிஸ்தானிலும் பெரிய வெற்றி பெற்றது. இவர் கடைசி படமான ’பாண்டம்’ என்ற படம் பாகிஸ்தான் தீவிரவாதியான ஹபீஸ் சயீத்தை ஒரு இந்திய ரா உளவுத்துறை அதிகாரி கொல்வதைப் பற்றிய கதையாகும். இந்த படத்தை கராச்சி நீதிமன்றம் தடை செய்தது. 

இந்நிலையில் கபீர் கான் பாகிஸ்தானின் லாகூரில் நடைப்பெறும் ஒரு கருத்தரங்கில் கலந்துக் கொல்வதற்காக கராச்சி விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து லாகூருக்கு புறப்பட தயாரானார். கபீர் கான் வருவதை அறிந்த ஒரு கும்பல் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விமான நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டது. மேலும் அவர் மீது தாக்குதல் நடத்தவும் முயற்சிக்கப்பட்டது. 

சிலர் அவரை நோக்கி காலணிகளை தூக்கி காட்டியுள்ளனர். மேலும் பாகிஸ்தானில் ரா உளவு அமைப்பின் செயல்பாடுகள் பற்றி படம் இயக்காதது ஏன்? என்றும் அவர்கள் கோஷமிட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Post your comment





Related News
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions