காரை நான் ஓட்டவில்லை: சல்மான் கான்

Bookmark and Share

காரை நான் ஓட்டவில்லை: சல்மான் கான்

போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், 49, விபத்துக்குள்ளான காரை தான் ஓட்ட வில்லை; மதுவும் அருந்தவில்லை என, கோர்ட்டில் தெரிவித்து உள்ளார்.

கடந்த 2002ம் ஆண்டு, மும்பை பாந்த்ரா பகுதியில், சல்மான் கான் ஓட்டி வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி நடைபாதையில் உறங்கியவர்கள் மீது மோதியது.

இதில், ஒருவர் உயிரிழந்தார்; மேலும், நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மதுபோதையில், சல்மான் கான் காரை அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி வந்ததற்கான ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பித்தனர்.

இதையடுத்து, அவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும் என, அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கு, நேற்று புதிதாக செஷன்ஸ் கோர்ட் முன் விசார ணைக்கு வந்தது.

இதில், நீதிபதி முன் ஆஜராகி, சல்மான் கான் வாக்குமூலம் அளித்தார். அதில், விபத்து ஏற்படுத்திய போது தன் காரை, டிரைவர் அசோக் சிங் தான் ஓட்டி னார் என்றும், பாரில் இருந்தது உண்மைதான்; ஆனால், மது குடிக்க வில்லை, வெறும் தண்ணீர் மட்டுமே குடித்ததாக வாக்கு மூலம் அளித்தார்.

மேலும், விபத்து நடந்ததும், போலீசுக்கு தகவல் தெரிவித்து, காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க உதவுமாறு, தன் டிரைவரை கேட்டு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, வரும் 30ம் தேதி முதல், சாட்சியங்களிடம் விசாரணை நடத்த கோர்ட் அனுமதி அளித்தது.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions