50-வது பிறந்தநாள் கொண்டாடினார் சல்மான் கான்!

Bookmark and Share

50-வது பிறந்தநாள் கொண்டாடினார் சல்மான் கான்!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது 50வது பிறந்தநாள் அன்று புகைப்படத்திற்கு கொடுத்த ஒரு போஸ் மிகவும் பிரபலம் ஆகியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது 50வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

அவரது பிறந்தநாளை குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ரசிகர்கள் 400 அடி நீள கேக் வெட்டி கொண்டாடினர். சும்மாவே பார்ட்டி கொடுக்கும் சல்மானின் பிறந்தநாள் அன்று பார்ட்டி இல்லாமலா, கண்டிப்பாக உண்டு. சல்மான் அளித்த பார்ட்டியில் பாலிவுட் பிரபலங்கள், அவரது முன்னாள் காதலிகள் கலந்து கொண்டனர்.

50?? சிலருக்கு வயது வெறும் எண் தான். பிறந்தநாள் வாழ்த்துக்கள் சல்மான் கான் என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ட்வீட் செய்து பார்ட்டியில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சல்மான் கான் ஹாலிவுட் நடிகர் வின் டீசல் போன்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அது என்ன வின் டீசல் போஸ் என்று நினைக்கிறீர்களா?

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஹாலிவுட் போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வின் டீசலுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் வின் டீசல் கொடுத்த போஸை தான் சல்மான் தற்போது கொடுத்துள்ளார்.

தீபிகா வின் டீசலுடன் அளித்த போஸை பலரும் கிண்டல் செய்தனர். இந்நிலையில் அதை கிண்டல் செய்வது போன்று நடிகர்கள் அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions