நான் ஒரு இந்து-முஸ்லிம்: நீதிபதியை குழப்பிய சல்மான் கான்

Bookmark and Share

நான் ஒரு இந்து-முஸ்லிம்: நீதிபதியை குழப்பிய சல்மான் கான்

ஹம் சாத் சாத் ஹெய்ன் என்ற திரைப்பட படப்பிடிப்பிற்காக கடந்த 1998 ஆம் ஆண்டு சல்மான்கான் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் நகருக்கு வந்திருந்தார்.

அவருடன் மேலும் சில பாலிவுட் நட்சத்திரங்களும் உடன் வந்திருந்தனர். அங்கு தங்கியிருந்தபோது ஜோத்பூர் அருகே உள்ள கன்கனி என்ற கிராமத்திற்கு சென்ற சல்மான்கான், வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் விலங்கினமான மான்கள் இரண்டை சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும், பயன்படுத்தியதாகவும் கூறி ஜோத்பூர் நீதிமன்றத்தில் கடந்த 16 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த வழக்கில் சல்மான்கான் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

அப்போது தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், இவ்வழக்கு பொய்யாக ஜோடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பூட்டிய அறைக்குள் நடைபெற்ற இந்த விசாரணையின்போது, முறைப்படி சில விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதால் சல்மான் கானின் முழுப்பெயர், பெற்றோரின் பெயர், தொழில், மதம் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்குமாறு தலைமை மாஜிஸ்திரேட் அனுபாமா பிஜ்லானி கூறினார்.

அதற்கு சல்மான் கானின் வக்கீல் எனது கட்சிக்காரர் இந்தியர் என்று குறிப்பிட்டார். மீண்டும் சில கேள்விகளை மாஜிஸ்திரேட் கேட்டபோது ‘நான் இந்து-முஸ்லிம்’ என்று கூறிய சல்மான் கான், பிரபல சினிமா கதாசிரியரான எனது தந்தை சலீம் கான் ஒரு முஸ்லீம், எனது தாயார் சுஷீலா சரக் ஒரு இந்து என்று விளக்கம் அளித்தார்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions