சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கு: ஜோத்பூர் நீதிமன்றத்தில் சல்மான்கான் வாக்குமூலம் அளித்தார்

Bookmark and Share

சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கு: ஜோத்பூர் நீதிமன்றத்தில் சல்மான்கான் வாக்குமூலம் அளித்தார்

சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும், பயன்படுத்தியதாகவும் கூறி ஜோத்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் இன்று வாக்குமூலம் அளித்தார்.

அப்போது தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், இவ்வழக்கு பொய்யாக ஜோடிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். பின்னர் நீதிமன்ற வளாகத்திலிருந்து புறப்பட்டு சென்றார்.

முன்னதாக கடந்த 1998 ஆம் ஆண்டு ஹம் சாத் சாத் ஹெய்ன் என்ற திரைப்பட படப்பிடிப்பிற்காக சல்மான்கான் ஜோத்பூர் வந்திருந்தார். அவருடன் மேலும் சில பாலிவுட் நட்சத்திரங்களும் உடன் வந்தனர். அவ்வாறு தங்கியிருந்தபோது ஜோத்பூர் அருகே உள்ள கன்கனி என்ற கிராமத்திற்கு சென்ற சல்மான்கான், வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் விலங்கினமான மான்கள் இரண்டை சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார். அதன் பின் 16 வருடங்களாக இவ்வழக்கு நடைபெற்று வருகிறது. விரைவில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions