மானை சுட்டுக்கொன்றது சல்மான்கான் என்பது உண்மை: டிரைவர் மீண்டும் உறுதி

Bookmark and Share

மானை சுட்டுக்கொன்றது சல்மான்கான் என்பது உண்மை: டிரைவர் மீண்டும் உறுதி

பிரபல இந்தி நடிகர் சல்மான்கான், கடந்த 1998-ம் ஆண்டு ஒரு இந்திப்படத்தின் படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு சென்றிருந்தபோது, அங்கு ‘சிங்காரா’ என்ற அரியவகை மானை வேட்டையாடி கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கீழ்க்கோர்ட்டில் 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட அவர், சமீபத்தில் ராஜஸ்தான் ஐகோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கில், அரசுத்தரப்பின் ஒரே சாட்சியாக இருந்தவர், சம்பவத்தின்போது சல்மான்கான் பயணம் செய்த ஷீப்பின் டிரைவரான ஹரிஷ் துலானி ஆவார். ஆனால், அவர் 2002-ம் ஆண்டில் இருந்து காணாமல் போய் விட்டதாக கூறப்பட்டது. இதனால் வழக்கு பலவீனம் அடைந்து, சல்மான்கான் விடுதலை ஆவதற்கு வழி வகுத்தது.

இந்நிலையில், ஷீப் டிரைவர் ஹரிஷ் துலானி, ஒரு தனியார் செய்தி சேனலுக்கு நேற்று பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

சல்மான்கான், அந்த மானை சுட்டுக்கொன்றார் என்று 18 ஆண்டுகளுக்கு முன்பே மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்தேன். அதில் இப்போதும் உறுதியாக இருக்கிறேன்.

நான் தலைமறைவாகி விடவில்லை. எனக்கும், என் தந்தைக்கும் ஏராளமான மிரட்டல்கள் வந்ததால், அச்சத்துடன் மறைந்து வாழ்ந்து வந்தேன்.

ஜோத்பூரில் உள்ள என் உறவினர்கள் வீடுகளில் தங்கினேன். போலீஸ் பாதுகாப்பு கேட்டேன். ஆனால் கிடைக்கவில்லை. ஒருவேளை கிடைத்திருந்தால், நான் கோர்ட்டில் சாட்சி அளித்திருப்பேன்.

நான் பயத்துடனே வாழ்ந்து வந்தது, சல்மான்கானின் டிரைவராக இருந்ததற்கு எனக்கு கிடைத்த தண்டனை. இப்போதும், அச்சத்துடனே வாழ்ந்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions