20 கோடி வரி செலுத்தி சல்மான்கான் முதலிடம்

Bookmark and Share

20 கோடி வரி செலுத்தி சல்மான்கான் முதலிடம்

கணிப்பின் அடிப்படையில் முன்கூட்டியே செலுத்தப்படும் அட்வான்ஸ் வரி தொடர்பாக வருமான வரித்துறையின் 2015–ம் ஆண்டுக்கான புள்ளி விவரம் வெளியாகி உள்ளது. வருமான வரித்துறை புள்ளி விவரப்படி சல்மான்கான் ரூ. 20 கோடி அட்வான்ஸ் வரி செலுத்தி முதல் இடத்தில் உள்ளார். 

சல்மான் கானின் 'பஜ்ரங்கி பைஜான்' படம் உலகம் முழுவதும் ரூ. 600 கோடி வருமானத்தை ஈட்டியது. இதுவே இந்த ஆண்டின் அதிக பட்ச வசூலாகும். சல்மான்கான் நடித்த 'பிரேம் ரத்தன் தன் பாயேர்' படமும் ரூ.200 கோடிக்கு வசூலாகியுள்ளது.

கடந்த முறை நடிகர் அக்‌ஷய் குமார் அட்வான்ஸ் வரி செலுத்துவதில் முதலிடத்தில் இருந்தார். அவர் தற்போது ரூ.16 கோடி வரி செலுத்தி 2–வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ரன்பீர்கபூர் ரூ. 15 கோடி செலுத்தி 3–ம் இடத்தில் உள்ளார். இவருக்கு 'தமாஷா', 'பாம்பே வெல்லைட்' ஆகியவை வெற்றிப் படங்களாக அமைந்தன. நடிகர் ஷாருக்கான் ரூ. 14 கோடி வரி செலுத்தி 4–வது இடத்தில் உள்ளார்.

கடந்த ஆண்டு இவர் நடித்ததில் 'வாலே' படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அவரது 'பாஜிராவ் மஸ்தான்' படமும் அதிக வசூலை குவித்தது. 

நடிகர் அமிதாப் பச்சன் ரூ. 8.7 கோடி வரி செலுத்தியுள்ளார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான 'பிக்கு', 'வஸிர்' ஆகிய படங்கள் வெற்றி பெறவில்லை.

இந்த புள்ளி விவரம் இந்த நிதியாண்டின் 3–வது காலாண்டு வரை மட்டுமே ஆகும். எனவே 4–வது காலாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரை) வரி செலுத்திய பிறகுதான் இந்த நிதி ஆண்டில் அதிக பட்ச வரி செலுத்தியவர்கள் யார் என்பது தெரியும்.

 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions