விபத்தின் போது காரை சல்மான் ஓட்டவில்லை: கோர்ட்டில் டிரைவர் சாட்சியம்

Bookmark and Share

விபத்தின் போது காரை சல்மான் ஓட்டவில்லை: கோர்ட்டில் டிரைவர் சாட்சியம்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் (49) கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் மும்பை பந்த்ரா பகுதியில் ஓட்டி வந்த டொயாட்டோ லேண்ட் குரூசர் கார், தாறுமாறாக ஓடி நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது மோதியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்த வழக்கு மும்பை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சல்மான் கான் அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் காரை ஓட்டி வந்ததற்கான போதுமான ஆதாரத்தை போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். எனவே, மரணம் விளைவிக்கும் குற்றம் செய்துள்ள சல்மான் கானுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இவ்வழக்கில் சல்மான் கானின் வாக்குமூலம் கடந்த 27-ம் தேதி பதிவு செய்யப்பட்டது. மேற்படி விபத்தை கண்ணால் கண்ட சாட்சியங்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, நீங்கள் டிரைவரின் இருக்கை வழியாக காரில் இருந்து கீழே இறங்கியதாக தெரிகிறதே..,? என்ற நீதிபதியின் கேள்விக்கு பதில் அளித்த சல்மான் கான், ‘விபத்து நடந்த பின்னர் காரில் நான் அமர்ந்திருந்த இடதுப்புற கதவு சிக்கி, பூட்டிக்கொண்டது’ என்று பதில் அளித்தார்.

விபத்துக்கு முன்னர் வரை சல்மான் கான் தனது நண்பர்களுடன் அமர்ந்திருந்த பார் வளாகத்தில் அந்த காரை பார்க்கிங் பகுதியில் பாதுகாத்த காவலர், அதை உங்களிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகின்றதே? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘எனக்கு நினைவில்லை’ என கூறினார்.

தனது சகோதரருடன் பாரில் இருந்தது உண்மைதான் என்பதை இன்று ஒப்புக்கொண்ட அவர், நான் மது எதுவும் அருந்தவில்லை. வெறும் தண்ணீரும் உணவும் மட்டும்தான் சாப்பிட்டேன் என தெரிவித்தார்.

பாரில் இருந்து வெளியேவந்த நீங்கள் போதையில் இருந்ததாகவும், இரண்டு முறை தடுமாறி கீழே விழுந்ததாக முன்னு என்ற சாட்சி கூறியுள்ளாரே..? என நீதிபதி கேட்டபோது, ‘தவறு’ என்று பதிலளித்தார். மேலும், ’விபத்து நடந்த பின்னர் அந்த இடத்தை விட்டு நான் ஓடிப்போனதாக கூறப்படுவதும் தவறு, 15 நிமிடத்துக்கு மேல் விபத்து நடந்த இடத்தில் நான் இருந்தேன்.

அந்த விபத்து பற்றி போலீசுக்கு தகவல் அளிக்கும்படி என் டிரைவரிடம் கூறினேன்’ என்றும் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்த அவர் கூறினார். இத்துடன் அவரது வாக்குமூலம் நிறைவடைந்தது.

அவரது கார் டிரைவரான அசோக் சிங் என்பவரிடம் நேற்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. சல்மான் கான் ஏற்கனவே அளித்த வாக்குமூலத்தை தழுவியே அவரது வாக்குமூலம் அமைந்திருந்தது. விபத்தின் போது அந்த காரை சல்மான் கான் ஓட்டவில்லை. நான்தான் ஓட்டினேன், அவர் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். காரின் டயர் வெடித்ததால் நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதைவைத்து பார்க்கையில், காரை மோதி ஒருவரை கொன்ற இந்த வழக்கில் சல்மான் கான் சாட்சியாகவும், காரின் டிரைவரான அசோக் சிங் குற்றவாளியாகவும் மாறும் வாய்ப்புகள் உள்ளன என்பது, குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions