சல்மான் கான் நடிக்கவிருக்கும் தனி ஒருவன் ரீமேக்

Bookmark and Share

சல்மான் கான்  நடிக்கவிருக்கும் தனி ஒருவன் ரீமேக்

தனி ஒருவன் படம் அண்ணன் ராஜா இயக்கத்தில் தம்பி ரவி நடித்து கடந்த வெள்ளியன்று வெளியானது.  வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 20 கோடிக்கும் மேல் இந்தப் படம் வசூலித்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. ராஜா, ரவி இருவரும் இணைந்து இதுவரை ஆறு படங்களைக் கொடுத்துள்ளனர். அந்த ஆறு படங்களில் தனி ஒருவன் படத்தைத் தவிர அனைத்துமே ரீமேக் படங்கள்தான்.

ராஜா முதன் முதலில் இயக்கிய தெலுங்குப் படமான அனுமான் ஜங்ஷன் படம் கூட மலையாளத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்ட படம்தான். விஜய் நாயகனாக நடிக்க ராஜா இயக்கிய வேலாயுதம் படமும் ரீமேக் படம்தான்.

அவ்வகையில் இதுவரை ராஜா இயக்கிய எட்டு படங்களில் ஏழு படங்கள் ரீமேக் படங்கள்தான்.  முதல் முறையாக ராஜா அவரே சொந்தமாகக் கதை எழுதி இயக்கி வெளிவந்துள்ள தனி ஒருவன் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய உரிமை வாங்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம். தெலுங்கிலும், ஹிந்தியிலும் படத்தை வாங்க இப்போதே தயாரிப்பாளரைத் தொந்தரவு செய்து வருகிறார்களாம்.

ஹிந்தியில் நம்பர் 1 நடிகராக இருக்கும் சல்மான் கான் தனி ஒருவன் படம் பற்றிக் கேள்விப்பட்டு இன்னும் சில நாட்களில் படத்தைப் பார்க்க உள்ளாராம். சமீபமாக சல்மான் கான் ரீமேக் படங்களில்தான் அதிகம் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரீமேக் படங்களை இயக்கி செல்லமாக ரீமேக் ராஜா என்று அழைக்கப்பட்டு வந்த ராஜா, மோகன் ராஜா என்று பெயரை மாற்றிய நேரம் அவருடைய படத்தின் ரீமேக் உரிமைக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது ஆச்சர்யப்படுத்தும் விஷயந்தான்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions