
அஜய் தேவ்கன் நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் த்ரிஷ்யம். மலையாள படத்தின் ரீ-மேக் என்றாலும் இந்தியிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அஜய், தனக்கு மீண்டும் சல்மான் கான் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அஜய் கூறியிருப்பதாவது... சன் ஆப் சர்தார் படத்தில் சல்மான் கான் ஒரு பாடலுக்கு ஆடினார். ரெடி படத்திற்காக நான் சிறப்பு தோற்றத்தில் நடித்தேன். நாங்கள் இருவரும் ஹம் தில் தே சக் சனம், லண்டன் ட்ரீம்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளோம்.
என்னால் முடிந்தவரை அவருடன் நடிக்க முயற்சித்து வருகிறேன் என்றவரிடம், இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டில் நீங்கள் இருவரும் நடிப்பீர்களா என்று கேட்டபோது... நட்பின் அடிப்படையிலேயே சல்மான் கானிடம் நான் போய் இதுப்பற்றி பேசுவேன். அவருக்கு பிடித்திருந்தால் நிச்சயமாக அவர் என்னுடன் சேர்ந்து நடிப்பார்.
அப்படி ஒரு படம் அமையும் என்றால் நிச்சயம் அந்தப்படத்திற்கு அது பெரிய பலமாக இருக்கும். எனக்கு கண்டிப்பாக அவருடன் சேர்ந்து நடிக்க ஆசை இருக்கிறது, ஆனால் தற்போது அதற்கான சூழ்நிலைகள் அமையவில்லை என்று கூறியுள்ளார்.
Post your comment