தீபாவளிக்கு ஒருநாள் தள்ளிப்போன சல்மான் படம்!

Bookmark and Share

தீபாவளிக்கு ஒருநாள் தள்ளிப்போன சல்மான் படம்!

இயக்குநர் சூரஜ் பர்ஜாத்யா, சல்மான் கான் கூட்டணியில், மைன் பியார் கியா, ஹம் ஆப்கே கெயின்கோன் போன்ற சூப்பர் ஹிட் படங்கள் வெளிவந்தன.

டைசியாக இருவரும்  ஹம் சாத் சாத் ஹே என்ற படத்தில் இணைந்தனர். அதன்பின் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் தற்போது இணைந்துள்ளனர். இவர்களது கூட்டணியில்,

பிரேம் ரத்தன் தன் பயோ என்ற படம் உருவாகி வருகிறது. இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அதில் ஒரு சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளிக்கு ஒருநாள் தள்ளி அதாவது நவம்பர் 12ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பண்டிகை தினங்களில் ஷாரூக்கான், சல்மான்கான், அமீர்கான் ஆகியோரது படங்கள் அதிக வசூலை குவிக்கும். கடந்த ஆண்டு ஷாரூக்கான் நடிப்பில் வெளிவந்த ஹேப்பி நியூ இயர் படம் ஒரேநாளில் ரூ.43 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

அதேப்போல் இந்தாண்டு சல்மான் படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்ததால் ஷாரூக்கானின் வசூல் சாதனையை முறியடிக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தற்போது ஒருநாள் தள்ளி ரிலீஸாவது விநியோகஸ்தர்கள் மத்தியில் சிறு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே இந்த ரம்ஜான் பண்டிகையில் சல்மானின், பஜ்ரங்கி பகிஜான் படம் ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை தன்ஷிகா
வெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்
அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா
பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions