குடிபோதையில் தான் சல்மான்கான் காரை ஓட்டினார்: சுப்ரீம் கோர்ட்டில் மராட்டிய அரசு வாதம்

Bookmark and Share

குடிபோதையில் தான் சல்மான்கான் காரை ஓட்டினார்: சுப்ரீம் கோர்ட்டில் மராட்டிய அரசு வாதம்

மும்பை புறநகர் பகுதியான பாந்திராவில் கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி நள்ளிரவு நேரம் இந்தி நடிகர் சல்மான்கானின் கார் மோதி, நடைபாதையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் பலியானார். 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தின்போது சல்மான்கான் குடிபோதையில் காரை ஓட்டியதாகவும், இதுவே விபத்துக்கு காரணம் என்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை ஏறத்தாழ 13 ஆண்டுகளாக மும்பை செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியிடப்பட்டது. அப்போது, சல்மான்கான் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரபூர்வமாக நிரூபணம் ஆகி இருப்பதாக கூறி, அவருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து உடனடியாக மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து சல்மான்கான் ஜாமீன் பெற்றார். 

இதனால், சிறைவாசத்தில் இருந்தும் அவர் தப்பினார். இந்த நிலையில், சல்மான்கான் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வந்த ஐகோர்ட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு கூறியது.

அப்போது, அவரை நிரபராதி என்று அறிவித்த நீதிபதி, இந்த வழக்கின் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவரை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தார். 

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து மராட்டிய அரசு கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் ஜே.எஸ்.கேகர் மற்றும் சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மராட்டிய அரசின் தரப்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டதாவது:- 

இந்த வழக்கில் ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பு ‘மாறுபாடானது’, ‘முறையற்றது’ மற்றும் ‘நீதியை கேலிக்கூத்தாக்கும் செயல்’. ஏனென்றால், விபத்து நடைபெற்ற அந்த துரதிருஷ்டவசமான இரவில், சல்மான்கான் குடிபோதையில் காரை ஓட்டியிருக்கிறார்.

மேலும், விபத்து நடந்து 12 மணிநேரம் கழித்து, அவரிடம் நடத்தப்பட்ட ரத்த மாதிரி சோதனையின் போது கூட அவரது உடலில் ஆல்கஹாலின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. 

தவிர, சம்பவத்தின்போது அவரிடம் டிரைவிங் லைசென்சும் கிடையாது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட மற்றொரு உண்மை. அதேவேளையில், விபத்துக்கு நான் தான் காரணம் என்று இப்போது கூறும் சல்மான்கானின் டிரைவர் அசோக் சிங்,

கடந்த 2002-ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டு வரை எங்கே சென்றிருந்தார்? 13 ஆண்டுகள் கழித்து திடீரென கோர்ட்டில் ஆஜராகி, நான் தான் காரை ஓட்டினேன் என்று அவர் கூறுகிறார். இது மிகவும் விசித்திரமாக இருக்கிறது. 

தன்னுடைய டிரைவரை பாதுகாக்க ஏன் சினிமா நடிகர் (சல்மான்கான்) இத்தனை நாட்கள் மவுனம் சாதிக்க வேண்டும்?. இவ்வாறு முகுல் ரோத்தகி வாதிட்டார். 

சல்மான்கான் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், ‘‘கார் விபத்து பற்றி அட்டர்னி ஜெனரல் நல்ல கதை சொல்லி இருக்கிறார். இதற்கு பதிலடி கொடுக்க என்னிடம் ஏராளமான வாதம் இருக்கிறது’’ என்று குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணையை வருகிற 12-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions