ரம்ஜானை முன்னிட்டு வீட்டின் முன் திரண்ட ரசிகர்களை சந்தித்த ஷாருக்கான், சல்மான்கான்!

Bookmark and Share

ரம்ஜானை முன்னிட்டு வீட்டின் முன் திரண்ட ரசிகர்களை சந்தித்த ஷாருக்கான், சல்மான்கான்!

ரம்ஜான் பண்டிகை தினத்தன்று பாந்திரா பேண்டு ஸ்டாண்டு பகுதியில் வசித்து வரும் நடிகர்கள் ஷாருக்கான், சல்மான்கான் ஆகியோர் வீடுகளின் முன் ரசிகர்கள் கூடுவது வழக்கம். அவர்களை நடிகர்கள் வெளியே வந்து சந்தித்து செல்வார்கள்.

நேற்று ரம்ஜான் பண்டிகை என்பதால் காலை முதலே பாந்திரா பேண்டு ஸ்டாண்டில் உள்ள நடிகர் ஷாருக்கானின் ‘மன்னத்’ வீடு மற்றும் சல்மான்கான் வீட்டின் முன்பும் ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் நடிகர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவிக்க பல மணிநேரமாக காத்து நின்றனர்.

இந்தநிலையில் மாலை 5 மணியளவில் நடிகர் ஷாருக்கான் தன் வீட்டின் முன் திரண்டு நின்ற ரசிகர்களை சந்தித்தார். அவர் தன் வீட்டின் முன் ரசிகர்களை சந்திப்பதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டு இருந்த மேடையில் வந்து நின்றார். அப்போது வீட்டின் முன் திரண்டு நின்ற ரசிகர்கள் உற்சாகமடைந்து ஆரவாரம் செய்தனர்.

நடிகர் ஷாருக்கான் மேடையில் நின்று கொண்டு ரசிகர்களை நோக்கி கையசைத்து வணக்கம் செலுத்தினார். அவரும், ரசிகர்களும் பரஸ்பர ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

ரசிகர்களை சந்திக்கும் முன்னதாக நடிகர் ஷாருக்கான் கூறியதாவது:-

ரம்ஜான் பண்டிகையையொட்டி பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. வழக்கம்போல வீட்டில் உள்ளவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டோம். சிறப்பு தொழுகை நடத்தினோம். அவ்வளவுதான். நடிகர் அமீர்கான் சமீபத்தில் அவரைவிட நானும், சல்மான்கானும் மிகப்பெரிய நடிகர்கள் என்று கூறியது அவருடைய பெருந்தன்மை.

அவருடைய பார்வையில் அது உண்மையாக இருக்கலாம். ஆனால் என்னைப்பொருத்தவரை என்னைவிட சல்மான்கானும், அமீர்கானும் சிறந்த நடிகர்கள்.

என்னுடைய பிள்ளைகள் நடிகரானாலும், என்ஜினீயர், டாக்டர் என என்ன ஆனாலும் நான் ஏற்றுக்கொள்வேன். அவர்களை படிக்க வைப்பது என் கடமை. என் பிள்ளைகள் மட்டுமல்ல எல்லோரும் படியுங்கள். படிப்பை பாதியில் கைவிட்டவர்கள் மீண்டும் படியுங்கள். படிப்பதற்கு வயது தடையல்ல. எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். கல்வி மனிதனுக்கு மிகவும் அவசியமானது.

நாட்டில் உள்ள அனைவரும் குறைந்தபட்சம் பட்டப்படிப்பாவது படிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். என்ஜினீயர், ராணுவ வீரர்கள், டாக்டர்கள், பத்திரிகையாளர்கள் என எல்லோரும் கடுமையாக உழைத்து நாட்டை முன்னேற்றம் அடைய செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் ஷாருக்கான் போல சல்மான்கானும் தனது வீட்டின் முன் திரண்டு நின்ற ரசிகர்களை சந்தித்தார். ரசிகர்கள் திரண்டதால் நேற்று சல்மான்கான் மற்றும் ஷாருக்கான் வீட்டின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions