சல்மான், ஷாருக்கானுக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி போலீசுக்கு கோர்ட்டு உத்தரவு

Bookmark and Share

சல்மான், ஷாருக்கானுக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி போலீசுக்கு கோர்ட்டு உத்தரவு

டெல்லி கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல் கவுரவ் குலாத்தி என்பவர் ஒரு மனுதாக்கல் செய்து இருந்தார். அதில் கூறப்பட்டு இருந்தாவது:- 

‘பிக் பாஸ் 9’ தொலைக்காட்சி ‘ரியாலிடி ஷோ’ தொடருக்காக அமைக்கப்பட்ட காளி கோவில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் ஷாருக்கான், சல்மான்கான் ஆகியோர் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக காலணிகளை அணிந்து நுழைந்துள்ளனர்.

தற்போது நாட்டில் சகிப்புத்தன்மை குறித்து பரவலாக பேசப்படுகிறது. ஷாருக்கான், சல்மான்கான் இருவரும் கூட சகிப்புத்தன்மை குறித்து தங்களுடைய கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து உள்ளனர். 

இதுபோன்ற நிலையில் காளிகோவில் சிலை உள்ள படப்பிடிப்பு தளத்தில் இருவரும் காலணி அணிந்து உள்ளனர். அதுவும் சிலைக்கு முன்பாக நின்று அவர்கள் இதுபோல் காட்சிதருகின்றனர்.

இதை இவர்கள் உள்நோக்கத்துடன் செய்து இருக்கின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்த நிகழ்ச்சி நடந்த எல்லைக்கு உட்பட்ட டெல்லி ரூப் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன்.

எனினும் இதன் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மத உணர்வுகளை புண்படுத்திய சம்பந்தப்பட்ட நடிகர்கள், இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. 

இது தொடர்பாக வீடியோ காட்சி ஒன்றையும் கவுரவ் குலாத்தி தனது புகார் மனுவுடன் இணைத்து இருந்தார். இந்த மனு மாஜிஸ்திரேட்டு வி.கே.கவுதம் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மாஜிஸ்திரேட்டு ‘‘மனுதாரரின் புகார் மீது நடிகர்கள் ஷாருக்கான், சல்மான்கான் ஆகியோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை சம்பந்தப்பட்ட ரூப் நகர் போலீஸ் நிலையத்தின் தலைமை அதிகாரி அடுத்த மாதம்(பிப்ரவரி) 12-ந்தேதி அன்று தாக்கல் செய்யவேண்டும்’’என்று உத்தரவிட்டார்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions