சல்மான்கான் படத்தை விளம்பரப்படுத்திய ஷாருக்கான்

Bookmark and Share

சல்மான்கான் படத்தை விளம்பரப்படுத்திய ஷாருக்கான்

கபீர்கான் இயக்கத்தில் சல்மான்கான் நடித்து வரும் இந்தி படம் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளது.

‘ஏக் தா டைகர்’ என்ற வெற்றி படத்திற்கு பிறகு கபீர்கானும், சல்மான் கானும் மீண்டும் இணைந்திருக்கும் படம் என்பதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஷாருக்கான் வெளியிட்டுள்ளார். சல்மான் கானும், ஷாருக்கானும் தொழில் ரீதியாகவும், நேரடியாகவும் தங்களுக்குள் பகை வளர்த்துக் கொண்டவர்கள். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சல்மான் கானின் தங்கை திருமண வரவேற்பில் ஷாருக்கான் நேரடியாக கலந்துகொண்டார். இதிலிருந்து, இவர்களுக்கு நல்ல நட்பு உருவாகியுள்ளது. 

அதன் வெளிப்பாடாகவே தற்போது சல்மான் கான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஷாருக்கான் வெளியிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ஷாருக்கான் கூறும்போது, ஒரு ஹீரோவாக இருப்பதைவிட அண்ணணாக இருப்பதுதான் பெரிய விஷயம். ‘பாய்ஜான்’ ரம்ஜானுக்கு வெளியாகவிருக்கிறது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்படியிருக்கிறது? என்று ரசிகர்களிடம் கேள்வியும் கேட்டுள்ளார். 

சல்மான் கான் நடித்த பெரும்பாலான படங்கள் ரம்ஜானில் வெளியாகி பெரிய அளவில் வெற்றியடைந்துள்ளது. அந்த வரிசையில் இந்த படமும் ரம்ஜானுக்கு வெளியாவதால், பெரிய வெற்றியடையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படத்தை சல்மான்கான் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions