சல்மான்கான் பட கதாபாத்திரங்களை பாராட்டிய மோகன்லால்..!

Bookmark and Share

சல்மான்கான் பட கதாபாத்திரங்களை பாராட்டிய மோகன்லால்..!

மோதிரக்கையால் குட்டுப்படுவது என்று சொல்ல்லப்படுவதை கேட்டிருப்பீர்கள் தானே.. அதிலும் பாலிவுட்டில் புதிதாக அறிமுகமாகியுள்ள இரண்டு நட்சத்திரங்களை கேரளாவில் உள்ள மோதிரக்கை ஒன்று குட்டியிருக்கிறது..இல்லையில்லை.. தட்டிக்கொடுத்திருக்கிறது.

கடந்த வெள்ளியன்று இந்தியில் வெளியான ஹீரோ படத்தின் நாயகன், நாயகியை பாராட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் மோகன்லால் கடிதம் எழுதியுள்ள ஒரு அரிதிலும் அரிதான நிகழ்வினை வேறெப்படி விவரிப்பது..? காரணம் இதற்கு முன் எப்போதும் மோகன்லால் இதுபோன்று வெளிப்படையாக யாருக்கும் பாராட்டு பத்திரம் வாசித்தது இல்லை என்பதுதான் வியப்பை பன்மடங்காக்கி உள்ளது.

இந்தி திரையுலகில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் மோகன்லாலின் நண்பர்கள்தான் என்றாலும், அவர்களது படத்தை பற்றி மோகன்லால் இதுவரை எதுவும் கூறியதில்லை. காரணம் அது தேவையில்லாமல் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகாமாக்கிவிடும் என்பதால் தான்.

அதனால் தான் இப்போது மோகன்லால் இரண்டு நட்சத்திரங்களை பாராட்டியுள்ளது அதிசயத்திலும் அதிசயமாக பார்க்கப்படுகிறது. ஹீரோ படத்தை தயாரித்துள்ளது பாலிவுட் கான்களில் ஒருவரான சல்மான் கான்.

ஹீரோவாக நடித்திருக்கும் சூரஜ் பஞ்சோலி, பிரபல நடிகரான ஆதித்யா பஞ்சோலியின் மகன். கதாநாயகியாக நடித்திருப்பவர் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான அதியா ஷெட்டி. இந்த இருவருக்கும் மோகன்லாலின் பாராட்டு மிகப்பெரிய ஊக்கத்தை தரும் என்பது உண்மை.


Post your comment





Related News
மாஸ் காட்டும் சல்மான் கான், இத்தனை கோடிகள் வசூலா!
சல்மான் கான் இடத்தை பிடிக்கிறாரா கமல்ஹாசன்- ஆனால்?
மச்சான், அவளை உன் பட ஹீரோயினாக்கேன்: முன்னாள் காதலிக்கு வாய்ப்பு தேடும் ஹீரோ
சல்மான்கானிடம் மீண்டும் காதலில் விழுந்த கத்ரீனாகைப்
காஷ்மீர் மாநில சுற்றுலா தூதராக ஆகிறார் சல்மான் கான்
பிரபல தமிழ் நாயகியை பாராட்டிய பாலிவுட் நடிகர் சல்மான் கான்
இந்த சூப்பர்ஸ்டார் தான் எமி ஜாக்சனின் புதிய காதலரா?
சானியா மிர்சா தங்கை திருமணத்தில் கலந்துகொண்டு நடனமாடி அசத்திய பிரபல நடிகர்!
திருமணம் புரிவதற்காக செத்து கொண்டிருக்கிறேன்: சல்மான்கான் பேட்டி
சல்மான்கான் வீட்டில் பெண்கள் முற்றுகை போராட்டம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions