சல்மான்கானை திருமணம் செய்ய அவசரம் காட்டவில்லை: காதலி லூலியா பேட்டி

Bookmark and Share

சல்மான்கானை திருமணம் செய்ய அவசரம் காட்டவில்லை: காதலி லூலியா பேட்டி

இந்தி நடிகர் சல்மான்கானுக்கு 50 வயதாகிறது. ஆனால், இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் ருமேனியா நாட்டைச் சேர்ந்த டி.வி. நடிகை லூலியா என்பவருடன் அவருக்கு காதல் மலர்ந்து உள்ளது.

சமீபத்தில் சல்மான்கானின் தாய் மற்றும் சகோதரியுடன் லூலியா மும்பை விமான நிலையத்தில் தோன்றினார். இதையடுத்து நடிகை பிரீத்தி ஜிந்தா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சல்மான்கான்- லூலியா காதல் ஜோடியினர் கலந்து கொண்டனர். இது அவர்களுக்கு இடையேயான காதல் நெருக்கத்தை உணர்த்தியது. மேலும் இந்த ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல் பரவியது.

இதற்கிடையே தனது திருமணம் எப்போது என்பது பற்றி ஊடகங்களுக்கு தெரிவிக்க மாட்டேன், அப்படி திருமணம் செய்து கொள்ளும்போது, அதை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வேன் என்று சல்மான்கான் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் திருமணம் பற்றி லூலியா சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை பதிவு செய்து உள்ளார். அதில், “வதந்திகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. ஆனால், உண்மையை நான் விளக்க விரும்புகிறேன்.

நான் திருமண உடையை உடுத்துவதில் அவசரம் காட்டவில்லை. கடவுள் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும்” என்று தெரிவித்து இருக்கிறார்.

இதற்கிடையே லூலியா இசைக்கலைஞர் ஒருவரை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டவர் என்ற தகவல் பரவியது. அதுபோன்று யாரையும் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் லூலியா மறுப்பு தெரிவித்து உள்ளார்.


Post your comment





Related News
மாஸ் காட்டும் சல்மான் கான், இத்தனை கோடிகள் வசூலா!
சல்மான் கான் இடத்தை பிடிக்கிறாரா கமல்ஹாசன்- ஆனால்?
மச்சான், அவளை உன் பட ஹீரோயினாக்கேன்: முன்னாள் காதலிக்கு வாய்ப்பு தேடும் ஹீரோ
சல்மான்கானிடம் மீண்டும் காதலில் விழுந்த கத்ரீனாகைப்
காஷ்மீர் மாநில சுற்றுலா தூதராக ஆகிறார் சல்மான் கான்
பிரபல தமிழ் நாயகியை பாராட்டிய பாலிவுட் நடிகர் சல்மான் கான்
இந்த சூப்பர்ஸ்டார் தான் எமி ஜாக்சனின் புதிய காதலரா?
சானியா மிர்சா தங்கை திருமணத்தில் கலந்துகொண்டு நடனமாடி அசத்திய பிரபல நடிகர்!
திருமணம் புரிவதற்காக செத்து கொண்டிருக்கிறேன்: சல்மான்கான் பேட்டி
சல்மான்கான் வீட்டில் பெண்கள் முற்றுகை போராட்டம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions