திருமணம் புரிவதற்காக செத்து கொண்டிருக்கிறேன்: சல்மான்கான் பேட்டி

Bookmark and Share

திருமணம் புரிவதற்காக செத்து கொண்டிருக்கிறேன்: சல்மான்கான் பேட்டி

சர்ச்சைக்கு பெயர் பெற்ற இந்தி நடிகர் சல்மான்கான், மும்பையில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, போட்டியாளர்களில் ஒருவர் சல்மான்கானின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு சல்மான்கான் உருக்கமாக பதிலளித்தார். அவர் கூறியதாவது:-

நீங்கள் தவறான ஒரு நபரை இலக்காக வைத்து கேட்கிறீர்கள். திருமண விஷயத்தில் எப்போதுமே நான் அதிர்ஷ்டம் இல்லாதவன். இந்த விஷயத்தில் என் மீதான பொதுமக்களின் அணுகுமுறையும் முற்றிலும் தவறானது.

சொல்லப்போனால், திருமணம் புரிவதற்காக நான் செத்து கொண்டிருக்கிறேன். திருமண விஷயத்தில் ஆண்கள் சொல்வதற்கு என்று எதுவுமில்லை. பெண்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். அவர்களது முடிவுக்காக எப்போதும் நான் காத்து கொண்டிருக்கிறேன். இவ்வாறு சல்மான்கான் தெரிவித்தார்.

50 வயது நடிகர் சல்மான்கானும், வெளிநாட்டை சேர்ந்த 35 வயதான தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் லூலியா வண்டூர் என்பவரும் தீவிரமாக காதலித்து வருகின்றனர். ஆனால், அவர்களது திருமணம் பற்றிய உறுதியான தகவல் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், பெண்களின் முடிவுக்காக காத்திருப்பதாக சல்மான்கான் சூசகமாக கூறியிருப்பது, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
மாஸ் காட்டும் சல்மான் கான், இத்தனை கோடிகள் வசூலா!
சல்மான் கான் இடத்தை பிடிக்கிறாரா கமல்ஹாசன்- ஆனால்?
மச்சான், அவளை உன் பட ஹீரோயினாக்கேன்: முன்னாள் காதலிக்கு வாய்ப்பு தேடும் ஹீரோ
சல்மான்கானிடம் மீண்டும் காதலில் விழுந்த கத்ரீனாகைப்
காஷ்மீர் மாநில சுற்றுலா தூதராக ஆகிறார் சல்மான் கான்
பிரபல தமிழ் நாயகியை பாராட்டிய பாலிவுட் நடிகர் சல்மான் கான்
இந்த சூப்பர்ஸ்டார் தான் எமி ஜாக்சனின் புதிய காதலரா?
சானியா மிர்சா தங்கை திருமணத்தில் கலந்துகொண்டு நடனமாடி அசத்திய பிரபல நடிகர்!
சல்மான்கான் வீட்டில் பெண்கள் முற்றுகை போராட்டம்!
சல்மான்கானை திருமணம் செய்ய அவசரம் காட்டவில்லை: காதலி லூலியா பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions