27 வயது வாலிபனாகவே இன்றும் உணர்கிறேன்-சல்மான் கான் பேட்டி

Bookmark and Share

27 வயது வாலிபனாகவே இன்றும் உணர்கிறேன்-சல்மான் கான் பேட்டி

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பையில் இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினார். 

பிரபல எழுத்தாளரான சலிம் கானின் மகனான சல்மான் கான் இன்று பாலிவுட்டில் தலைசிறந்த கதாநாயகர்களில் ஒருவராக திகழந்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'பஜ்ரங்கி பாய்ஜான்' படத்தின் மூலம் ஏராளமான ரசிகைகளின் மனத்தில் நீங்காத இடம்பிடித்துள்ள சல்மான் கான், இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பெரும் இந்திய ரசிகர் பட்டாளத்தை கவர்ந்துள்ளார்.

இதற்கிணையாக, உள்நாட்டிலும் போதையில் காரை ஓட்டி ஒருவரை கொன்ற வழக்கு, அழியும்நிலையில் உள்ள உயிரினமாக அறிவிக்கப்பட்டு, இந்திய அரசால் கொல்லகூடாது என தடை செய்யப்பட்ட கடமானை வேட்டையாடி விருந்துண்ட வழக்கு என இரு வழக்குகளை சந்தித்து, இவற்றில் விபத்துசார்ந்த கொலை வழக்கில் மூன்றாண்டு சிறை தண்டனை பெற்ற சல்மான், இந்த தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து சமீபத்தில் அந்த தண்டனையில் இருந்தும் தப்பினார். 

பிரபல நிழல் உலக தாதா டைகர் மேமன் செய்த தவறுக்காக மும்பை தீவிரவாத தொடர் தாக்குதல் வழக்கில் பிடிபட்டுள்ள டைகர் மேமனின் சகோதரரான யாக்கூப் மேமனை தூக்கிலிட கூடாது என்று டுவிட்டரில் கருத்து வெளியிட்டு, 'சரியாக வாங்கிக்கட்டிக் கொண்ட' சல்மான் கான், இன்று மும்பையில் தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினார். 

அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எனக்கு இன்று 27 வயது. 27 என்பதே சரியான வயது என நான் கருதுகிறேன். வயதாவதைப் பற்றி எனக்கு பயமில்லை. எப்போதுமே அது 27 ஆகவே இருக்கும்.

இன்றும் எனக்கு 27 வயதாவதாகவே நினைக்கிறேன். இதில் பயப்பட என்ன உள்ளது? வயது என்பது எனது பயணத்தின் ஒருபகுதி அவ்வளவுதான் என தெரிவித்துள்ளார். 

இன்று பிறந்தநாள் காணும் சல்மான் கானுக்கு பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னான்டஸ், சோனாக்‌ஷி சின்ஹா, சோனாலி பிந்த்ரே, சன்னி லியோன், நடிகர் அனில் கபூர், சினிமா தயாரிப்பாளரும் இயக்குனருமான கரன் ஜோஹர், இயக்குனர் நிகில் அத்வானி ஆகியோர் வாழ்த்து தெரித்துள்ளனர்.


Post your comment

Related News
மாஸ் காட்டும் சல்மான் கான், இத்தனை கோடிகள் வசூலா!
சல்மான் கான் இடத்தை பிடிக்கிறாரா கமல்ஹாசன்- ஆனால்?
மச்சான், அவளை உன் பட ஹீரோயினாக்கேன்: முன்னாள் காதலிக்கு வாய்ப்பு தேடும் ஹீரோ
சல்மான்கானிடம் மீண்டும் காதலில் விழுந்த கத்ரீனாகைப்
காஷ்மீர் மாநில சுற்றுலா தூதராக ஆகிறார் சல்மான் கான்
பிரபல தமிழ் நாயகியை பாராட்டிய பாலிவுட் நடிகர் சல்மான் கான்
இந்த சூப்பர்ஸ்டார் தான் எமி ஜாக்சனின் புதிய காதலரா?
சானியா மிர்சா தங்கை திருமணத்தில் கலந்துகொண்டு நடனமாடி அசத்திய பிரபல நடிகர்!
திருமணம் புரிவதற்காக செத்து கொண்டிருக்கிறேன்: சல்மான்கான் பேட்டி
சல்மான்கான் வீட்டில் பெண்கள் முற்றுகை போராட்டம்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions