கான் மார்க்கெட் என்ற பெயரை கைவிடுங்கள்: சல்மான்கான் வலியுறுத்தல்

Bookmark and Share

கான் மார்க்கெட் என்ற பெயரை கைவிடுங்கள்: சல்மான்கான் வலியுறுத்தல்

டெல்லியில் உள்ள கான் மார்க்கெட் வர்த்தக சங்கம் `முத்திரை மீறல்’ தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வரும் நிலையில்  ‘கான் மார்க்கெட்’ என்ற பெயரைக் கைவிடுமாறு அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT) சல்மான் கானை நேற்று வலியுறுத்தியுள்ளது.

சல்மான் கான் தனது 50-வது பிறந்த நாளை முன்னிட்டு புதிததாக கான் மார்க்கெட் டாட் காம் (khanmarketonline.com) என்ற ஆன்லைன் விற்பனை இணைய தளத்தை ரசிகர்களுக்காக தொடங்க உள்ளதாக ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

இதை ஆரம்பிப்பதற்கான செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ரசிகர்கள் அந்த இணையதளத்தில் சுய விவரங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

புது டெல்லியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற  ‘கான் மார்க்கெட்’ 65 வருட பழமையான சந்தை ஆகும். இங்கு 156 கடைகள் மற்றும் 35 உணவகங்கள் இருக்கின்றன. சல்மானின் இணையதளத்தால் கடைக்காரர்கள் குழப்பத்திற்கு ஆளாக நேரிடும் என்று கான் வர்த்தகர் சங்கம் கூறுகின்றது.

முன்னதாக ``இந்த ஆன்லைன் விற்பனை இணையதள பெயருக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். கான் மார்க்கெட் என்ற பெயர் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் பிரபலமானது.

சல்மான் கான் ஆரம்பிக்க உள்ள இந்த இணைய தளத்தால் எங்களது சந்தையின் பெயர் தவறான முறையில் பயன்படுத்தப்படும். இதனால் எங்களுக்கென்று உள்ள அடையாளம் பாதிக்கப்படும்’’ என்று கான் மார்க்கெட் வர்த்தக சங்கத்தின் தலைவர் சஞ்சீவ் மெஹ்ரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சல்மான் கானின் இந்த முடிவு ஏமாற்றமளிப்பதாகவும், இது வர்த்தகர்களின் உரிமைகளை மீறும் செயல் என்றும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொது செயலாளர் ப்ரவீன் கந்தேல்வால் நேற்று தெரிவித்துள்ளார்.

மேலும் 65 வருடங்களுக்கும் மேலாக வர்த்தகர்கள் சம்பாதித்த நற்பெயரை இன்னொருவர் சொந்தம் கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இது குறித்து சல்மான் கானுடன் தொடர்பு கொண்டு கான் மார்க்கெட் என்ர பெயரைக் கைவிட வலியுறுத்த இருப்பதாகவும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions