ரசிகர்கள் சண்டை தொடர்கிறது... மீண்டும் இணைவார்களா

Bookmark and Share

ரசிகர்கள் சண்டை தொடர்கிறது... மீண்டும் இணைவார்களா

முதல் நாள் வசூல் கத்தியா, வேதாளமா என சண்டைகள் நடந்துகொண்டிருக்கும் அதே வேளையில் பாலிவுட்டிலும் உங்க ஹீரோ படம் ஹிட்டா எங்க ஹீரோ படம் ஹிட்டா என ட்ரெண்டை உருவாக்கி சண்டையிட்டு வருகிறார்கள். சல்மான்கான் , ஷாருக்கான் ரசிகர்கள். 

சமீபத்தில் வெளியான பிரேம் ரத்தன் தான் பயோ படத்திற்கு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்புகள் கிடைத்து மீண்டும் ஓபனிங் கிங் என சல்மான் கான் நிரூபித்து வரும் நிலையில் புது ட்ரெண்ட் ஒன்று ட்விட்டரில் நம் கண்களை இழுத்தன. பிறகு தான் தெரிந்தது அது ஷாருக்கானின் ரசிகர்கள் செய்த வேலையென்று.

ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர் படம் முதல் நாள் 45 கோடிகளை வசூலித்த நிலையில், பிரேம் ரத்தன் தான் பயோ படம் 40கோடிகளை வசூலித்ததாக செய்திகள் வெளியாக ரசிகர்கள் ட்ரெண்ட்டை உருவாக்கிவிட்டனர்.

அதில் #HNY45crPRDP42cr என தற்போது இந்திய ட்ரெண்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கே தான் அஜித் விஜய் ரசிகர்கள் மீடியாக்களைக் கூட அவர்களின் நாயகன்கள் குறித்து பேசக்கூடாது என கூறிவரும் நிலையில் அங்கேயும் அதே போல் சண்டை வெடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தங்கள் நடிகர்களை உண்மையில் இவர்கள் பாதுகாக்கிறார்களா அல்லது இவர்களின் இணையச் சண்டைக்கு தீணியாக்கிவிட்டார்களா என்றே தோன்றுகிறது. சம்மந்தப்பட்ட நடிகர்களே கூட இவர்கள் மத்தியில் இப்போது கருத்து சொல்ல பயந்தாக வேண்டிய நிலையில் தான் இந்திய சினிமா டாப் நடிகர்களின் நிலை உள்ளது என்றால் அது மிகையாகாது.


Post your comment





Related News
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
விக்கிப்பீடியாவில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள் பட்டியல் - உலக அளவில் 2வது இடம் பிடித்த இந்திய நடிகர்
பெண்களுக்கு எதிரான வன்முறை மோசமான செயல்: ஷாருக்கான்
ஷாருக்கான் வீட்டெதிரில் ரசிகைக்கு ஏற்பட்ட சோகம்!
என்னது அந்த நடிகரின் மகளோட அதுவே இவ்வளவு விலையா? - வைரலாகும் புகைப்படம்.!
வைரலாகும் பிரபல முன்னணி நடிகர் மகளின் நீச்சல் குள குளியல் புகைப்படம்.!
மாதவனுக்காக ஷாருக்கான் செய்த உதவி
இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் இடம் பெற்ற நடிகர்கள்!
நூலிலையில் உயிர் தப்பித்த நடிகர் ஷாருக்கான்! அலறல் சம்பவம்
பாகுபலி பற்றி முதன்முறையாக வாய்திறந்த ஷாருக்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions