கண்தான விழிப்புணர்வுக்காக பார்வையற்றவராக நடித்தார் சலோனி

Bookmark and Share

கண்தான விழிப்புணர்வுக்காக பார்வையற்றவராக நடித்தார் சலோனி

சரபம் படத்தில் ஹீரோயின், வில்லி என இரண்டு கேரக்டர்களில் நடித்து அசத்தியவர் சலோனி லுத்ரா. மராட்டிய நாடக நடிகை. இவர் தற்போது கண்தான விழிப்புணர்வுக்காக தயாரிக்கப்பட்ட ஒரு குறும்படத்தில் பார்வையற்றவராக நடித்துள்ளார்.

இதனை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ளார். இன்னும் டைட்டில் வைக்கபடாத இந்த குறும்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்தது.

இதில் சலோனி மேக்-அப் எதுவும் போடாமல் அசல் பார்வையற்றவர் போல தெருவில் ஹேர்பின் விற்கிற பெண்ணாக நடித்தார். பல இடங்களில் அவரை தெருவில் ஹேர்பின் விற்கவிட்டு அதனை ஹிட்டன் கேமரா முறையில் மறைந்திருந்து படமாக்கி இருக்கிறார்கள்.

அவரை யாரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லையாம். அடுத்து ஒரு புதிய தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார் சலோனி. "குறும்படத்தின் நோக்கமும், கதையும் பிடித்திருந்ததால் நடிக்க சம்மதித்தேன்.

படப்பிடிப்பு நடந்த நாட்கள் என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள். தமிழில் நடிக்க கதை கேட்டு வருகிறேன். விரைவில் அது பற்றிய அறிவிப்பு வரும்" என்கிறார் சலோனி.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions