மீண்டும் தமிழில் சலோனி....!

Bookmark and Share

மீண்டும் தமிழில் சலோனி....!

சரபம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி முதல் படத்திலேயே சிறப்பாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றார் சலோனி. 

ஆனால் சரபம் ப்ளாப் ஆனதால் சலோனிக்கு தமிழில் படங்கள் இல்லாமல் போனது. எனவே ஏமாற்றமடைந்த சலோனி இனி தமிழ்ப்படமே வேண்டாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார். 

இந்நிலையில் எதிர்பாராத வகையில் ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு சலோனிக்கு கிடைத்துள்ளது. பிரபுதேவா தமிழில் தயாரிக்கும் 3 படங்களில் ஒன்றான விநோதன் படத்தில் இன்னொரு நாயகியாக நடிகை சலோனியும் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐசரிவேலனின் பேரனான அறிமுக நாயகன் வருண் நடிக்கும் இப்படத்தில் வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார். 

புதுமுக இயக்குனர் விக்டர் ஜெயராஜ் இயக்கும் இப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்படத்தின் மூலம் மீண்டும் நம்பிக்கையோடு தமிழ் சினிமாவிற்கு வருகிறார் சலோனி.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions