விஜய் படத்தால் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-க்கு குவியும் பாராட்டுகள்.!

Bookmark and Share

விஜய் படத்தால் இசையமைப்பாளர் சாம்  சி.எஸ்-க்கு குவியும் பாராட்டுகள்.!

சில இயக்குனர்களுக்கு மட்டுமே இசை ஞானம் மேலோங்கி இருக்கும். அது அவர்களது பட பாடல்களிலும் பின்னணி இசையிலும் பிரதிபலிக்கும். இந்த வகையை சேர்ந்தவர் தான் இயக்குனர் விஜய்.

அவரது முதல் படத்திலிருந்து அருமையான பாடல்கள் மற்றும் மறக்கமுடியாத பின்னணி இசைகளை தந்துள்ளதால் அவரது அடுத்த படமான 'லைகாவின் கரு' படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியது.

இது நடிகர் நாக சௌர்யா , நடிகை சாய் பல்லவியின் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் சாம் CS - இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள முதல் படம் இது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ,ரிலீசான நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.

இது குறித்து இயக்குனர் விஜய் பேசுகையில், சமீபகாலத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு இசையமைப்பாளர் சாம் CS. கதையையும், பாடல்களின் சூழ்நிலையையும் சரியாக புரிந்துகொண்டு அசத்துபவர் அவர். இந்த படத்தின் அவரது பாடல்கள் எனது எல்லா படங்களின் மிக சிறந்த பாடல்களில் பட்டியலில் நிச்சயம் இடம் பெறும்.

'லைகாவின் கரு' படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் தந்திருக்கும் வரவேற்பு எனக்கு ஆச்சிரியமளிக்கவில்லை.ஏனென்றால் நான் அதை எதிர்பார்த்ததுதான். இந்த பாடல்களை போலவே 'லைக்காவின் கரு' படமும் ஜீவனுடன் அழகாக இருக்கும் என உறுதியாக கூறுவேன்.

இந்த படத்தை 'Lyca Productions' நிறுவனம் தயாரித்துள்ளது. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில், ஆண்டனியின் படத்தொகுப்பில் 'லைகாவின் கரு' உருவாகியுள்ளது.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்
மீண்டும் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்குக்கு மாறும் அஜித்
அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இமான்
குழந்தை பெற்றாலும் தொடர்ந்து நடிப்பேன் - சமந்தா
நயன்தாராவிற்காக சிவாவிடம் கோரிக்கை வைத்த அஜித் - வெளிவராத விஸ்வாச ரகசியம்.!
மீண்டும் கவர்ச்சியில் ரசிகர்களை ஷாக்காக்கிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
பாதை மாறிவிட்டது, திருமணத்துக்கு பிறகும் சுதந்திரமாக நடிக்கிறேன் - சமந்தா
அந்த படத்தை பார்க்க மாட்டேன், நடிக்கவும் மாட்டேன் - அரவிந்த் சாமி
தமிழ் சினிமா ஸ்ட்ரைக், வசூல் வேட்டையாடும் சம்முவின் ரங்கஸ்தலம்.!
நீண்ட இடைவெளிக்கு பிறகு விஸ்வாசம் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions