சமந்தா மீது தீராத கோபத்தில் மகேஷ்பாபு ரசிகர்கள்

Bookmark and Share

சமந்தா மீது தீராத கோபத்தில் மகேஷ்பாபு ரசிகர்கள்

டோலிவுட்டின் பிரின்சஸ் மகேஷ் பாபுவுடன் நடிகை சமந்தா டூகுடு, சீதம்மா வைகட்டுலு சிரிமல்லி செட்டு எனும் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது மூன்றாவது முறையாக சமந்தா மகேஷ் பாபுவுடன் பிரமோற்சவம் படத்தில் ஜோடி சேரவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கு மகேஷ் பாபு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மகேஷ் பாபுவின் நம்பர் 1 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து சமந்தா அடித்த கமெண்டும் அதனால் எழுந்த பழைய பிரச்சனையும் தான் சமந்தா மீது மகேஷ் பாபு ரசிகர்கள் கொண்டுள்ள கோபத்திற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.

அப்பிரச்சனைக்கு பின்னர் மகேஷ் பாபுவும் சமந்தாவும் ராசி ஆகிவிட்டதாகவும் இருவரும் சேர்ந்து விழாக்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் ஊடகங்களில் வெளிவந்தன. இருப்பினும் மகேஷ் பாபு ரசிகர்கள் சமந்தா மீது இன்றும் கோபத்தில் உள்ளனர். மகேஷ் பாபு ஸ்ரீமந்துடு படத்திற்கு பின்னர் இயக்குநர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் பிரமோற்சவம் படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் நாயகிகளாக ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் பரணிதா சுபாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மூன்று நாயகிகள் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட இப்படத்தில் தற்போது சமந்தா மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் ராகுல் ப்ரீத்தி சிங் இரண்டாவது நாயகியாக நடிக்கக் கூடும் என தெரிகிறது. ஆனால் சமந்தா இப்படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மகேஷ் பாபு ரசிகர்கள் சமந்தாவை படத்திலிருந்து நீக்கவும் மகேஷ் பாபுவிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Post your comment





Related News
அஜித் வழியை பின்பற்றும் மகேஷ் பாபு!
மகேஷ் பாபுவின் தமிழ் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
டிவிட்டரில் மகேஷ் பாபு படைத்த மாபெரும் சாதனை!
மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க 3 நாயகிகள் பரிசீலனை!
மகேஷ்பாபு ஒதுக்கிய படத்தில் சூர்யா!
இயக்குநருக்கு ஆடி கார் பரிசளித்த மகேஷ் பாபு!
தனி ஒருவன் மீது மகேஷ் பாபுவுக்கும் ஆசை வந்துவிட்டது ?
இணையத்தில் வெளிவந்த பிரமோற்சவம் கதை
மகேஷ் பாபு நிஜத்திலும் ஹீரோ தான்
தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் : மகேஷ் பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions