எனக்கு சவால்கள் பிடிக்கும் - சமந்தா

Bookmark and Share

எனக்கு சவால்கள் பிடிக்கும் - சமந்தா

திருமணத்துக்கு பின்னர்தான் சமந்தாவின் சினிமா கேரியர் உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. தனி கதாநாயகியாக அவர் நடித்த யு டர்ன் படம் வெற்றி அடைந்ததால் தொடர்ந்து அதுபோன்ற படங்களில் நடித்து வருகிறார். 

தென் கொரியாவில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் மிஸ் கிரானி. வயதான பெண் எதிர்பாராதவிதமாக இளவயது தோற்றத்தை அடைவதை மையமாகக் கொண்டு உருவாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கை நந்தினி ரெட்டி இயக்குகிறார். இதில் 50 வயதுப் பெண்ணாக சமந்தா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இந்தக் கதாபாத்திரம் குறித்து சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“இதுவரை நான் செய்யாத சுவாரசியமான கதாபாத்திரத்திற்காகத் தயாராகி வருகிறேன். இப்போது யோசித்துப் பார்த்தால் நான் பயப்படுபவளாகவும் எப்போதும் பதற்றம் கொண்டவளாகவுமே இருந்திருக்கிறேன்.

ஆனால் ஒரு போதும் சவாலை எதிர்கொள்ளத் தவறியதில்லை. சவால்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பெரும்பாலான நேரங்களில் நாம் நினைப்பதை விடவும் தைரியமானவர்களாகவே நாம் இருக்கிறோம்” என்று படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் தனது கதாபாத்திரம் குறித்துக் கூறியிருப்பதுடன் படங்களைத் தேர்வு செய்யும்போது இருக்கும் மனநிலை குறித்தும் பதிவு செய்துள்ளார். 


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions