நான் நடித்த படங்களை பார்க்க விரும்பமாட்டேன் சமந்தா!

Bookmark and Share

நான் நடித்த படங்களை பார்க்க விரும்பமாட்டேன் சமந்தா!

தமிழ் திரை உலகில் முக்கியமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. அவர் நடித்த படங்களை அவரே பார்ப்பது இல்லை என்கிறார். காரணம் என்ன?

இது குறித்து அவரே சொல்கிறார்... நான் நன்றாக நடிக்க வேண்டும் என்று விரும்புவேன். படங்களில் இயக்குனர் விருப்பப்படி திருப்தி ஏற்படும் வரை நடிப்பேன்.

ஆனால் நான் நடித்த படங்களை நான் பார்க்க மாட்டேன். அதில் எனக்கு விருப்பம் இல்லை. என் நடிப்பை யாராவது குறை சொல்லிவிடுவார்களோ என்ற பயம் தான் இதற்கு காரணம். தமிழில் நான் விக்ரமுடன் நடித்துள்ள ‘பத்து எண்ணறதுக்குள்ள’ படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து இருக்கிறேன்.

இது எனக்கு புதிய அனுபவம். இந்த படத்தில் என் நடிப்பு எப்படி இருக்கிறது என்பதை அறிய படத்தை பார்க்கலாம் என்று இருக்கிறேன். 

தமிழில் நான் முதலில் நடித்த படம் வெற்றி பெற வில்லை. ஆனால் ‘விண்ணை தாண்டி வருவாயா’ தெலுங்கு ரீமேக்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஒரு படம் தோல்வி அடைந்து விட்டது என்று சோர்ந்து போனால் கவலைதான் மிஞ்சும்.

எத்தனையோ வெற்றி தோல்வியை பார்த்துள்ளேன். எதை பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து நடித்து வருவதால்தான் அடுத்த படங்களில் வெற்றி பெற முடிகிறது. 

னடிப்பில் இடைவெளி விழுந்தால் தோல்விகளை நினைத்து அழுது கொண்டுதான் இருக்கவேண்டும். அப்படி ஒரு நிலை வராமல் தமிழ், தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்புகள் வருகின்றன. இதில் கதைக்கு ஏற்ப சிந்தித்து நடித்து வருகிறேன். மேலும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
சர்வதேச திரைப்பட விழாவில் மெர்சல் - ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions