சமந்தாவைக் கோபப்படுத்துவது யார் ?

Bookmark and Share

சமந்தாவைக் கோபப்படுத்துவது யார் ?

சமந்தா தெலுங்கில் நடித்துள்ள 'சன் ஆப் சத்தியமூர்த்தி'  அடுத்த வாரம் 9ம் தேதி வெளியாக உள்ளது. தமிழில் விக்ரமுடன் நடித்துள்ள '10 எண்றதுக்குள்ள' அடுத்த மாதம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆறு மாத காலமாக சமந்தா நடித்து எந்தப் படமும் வெளியாகாத நிலையில் இந்த ஆண்டில் அவர் நடித்து வெளிவரும் படங்களின் எண்ணிக்கை  அடுத்த வாரம் முதல் ஆரம்பமாக உள்ளது. தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் நடித்துள்ள 'சன் ஆப் சத்தியமூர்த்தி' படத்திற்கு நிறையவே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

'10 எண்றதுக்குள்ள' படத்தில் தான் இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரம் என சமந்தாவே சொல்லியிருக்கிறார். இடையில் சித்தார்த் காதல் பற்றிய சர்ச்சையான செய்திகளில் அடிபட ஆரம்பித்த பின் டிவிட்டரை விட்டு சில நாட்கள் ஒதுங்கியிருந்த சமந்தா, மீண்டும் வந்து தொடர்ந்து டிவீட் பண்ண ஆரபித்தார்.

ஆடிய வாயும் பாடிய காலும் சும்மா இருக்காது என்பது போல பல புதிரான டிவீட்டுகளைப் போடுவது சமந்தாவின் வழக்கம். அப்படி சில நாட்களுக்கு முன் “சமயங்களில் 'கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்' என கட்டுப்படுத்த முடியாமல் தூண்டுதலை ஏற்படுத்துகிறது” என கூறியுள்ளார். சமந்தாவை இந்த அளவிற்கு கோப்படுத்தியிருப்பது யாரோ...?


Post your comment





Related News
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions