இரட்டை வேடத்தில் நடிக்கும் சமந்தா...!

Bookmark and Share

இரட்டை வேடத்தில் நடிக்கும் சமந்தா...!

ஐ படத்தை அடுத்து 10 எண்றதுக்குள்ளே படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். கோலிசோடா படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் இயக்கும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

10 எண்றதுக்குள்ளே படத்தில் லாரி டிரைவராக நடிக்கிறார் விக்ரம்.  எனவே சென்னையில் தொடங்கி நேபாளம் வரை 10 எண்றதுக்குள்ளே படத்தின் கதை ட்ராவல் ஆகிறது. பல ஊர்களில் படமாக்கப்பட்ட 10 எண்றதுக்குள்ளே  படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் தற்போது நேபாளத்தில் நடைபெற்று வருகிறது.

ஏப்ரல் 15 ஆம்தேதி வரை அங்கே படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதோடு 10 எண்றதுக்குள்ளே படத்தின் படப்பிடிப்பு நிறைவடைகிறது. 10 எண்றதுக்குள்ளே படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

படத்தில் அவருக்கு இரட்டை வேடமாம். ஒரு வேடம் வழக்கமான சிட்டி கேர்ள். மற்றொரு வேடம்தான் வித்தியாசம். நேபாளத்தைச் சேர்ந்த கிராமத்துப்பெண்ணாக நடிக்கிறார் சமந்தா. இந்த வேடத்தில் நடிப்பதற்காக மேக்கப் மூலம் கண்களை சின்னதாக்கி அசல் நேபாளத்துப்பெண்ணாகவே மாறி இருக்கிறாராம் சமந்தா.


Post your comment





Related News
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions