'மே' மீண்டும் வருமா ? - சமந்தா

Bookmark and Share

'மே' மீண்டும் வருமா ? - சமந்தா

தமிழ்த் திரையுலகில் இந்த ஆண்டின் கனவுக்கன்னியாக வரும் அனைத்துத் தகுதிகளும் சமந்தாவிற்கு இருக்கிறது. எப்படியும் இந்த ஆண்டு அவர் நடிக்கும் 'பத்து எண்ணுறதுக்குள்ளே, வேலையில்லா பட்டதாரி 2' ஆகிய படங்கள்  வெளிவந்து விடும்.

அது மட்டுமில்லாமல் விஜய் அடுத்து அட்லீ நடிக்கும் படத்திலும், வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திலும் சமந்தாதான் கதாநாயகி. ஆக, இந்த வருடம் முழுவதும் சமந்தா செய்திகளில் அடிபட்டுக் கொண்டேயிருப்பார். தெலுங்கில் அதிகமான வாய்ப்புகள் வந்தாலும் தமிழில் ஒரு இடத்தைப் பிடிக்க சமந்தா முயற்சிப்பதாகச் சொல்கிறார்கள்.

அதனால், தெலுங்கில் குறிப்பிட்ட சில வாய்ப்புகளில் மட்டும் நடிக்க சம்மதம் சொல்வாராம். இதனிடையே, கடந்த மே மாதத்தில் பல நாட்களை தனது சொந்த ஊரான சென்னையில் கழித்திருக்கிறார் தமன்னா. சென்னை, பல்லாவரத்தைச் சேர்ந்தவரான சமந்தா நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் அதிக நாட்களை சென்னையில் செலவழித்துள்ளாராம்.

தொடர்ந்து தெலுங்குப் படங்களிலேயே அதிகம் நடித்து வந்ததால்  கடந்த சில வருடங்களாக ஹைதராபாத்தில்தான் அதிக நாட்கள் இருந்திருக்கிறார். மே மாதத்தை சென்னையில் கழித்ததைப் பற்றி சமந்தா அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில்  மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

“என் தோழிகளையும், சென்னையையும் மிஸ் செய்கிறேன். மீண்டும் மே மாதம் எனக்கு வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
சர்வதேச திரைப்பட விழாவில் மெர்சல் - ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions