வடசென்னை படத்திற்க்காக குடிசைவாழ் மக்களுடன் தங்கி பழகும் சமந்தா!

Bookmark and Share

வடசென்னை படத்திற்க்காக குடிசைவாழ் மக்களுடன் தங்கி பழகும் சமந்தா!

தனுஷ் அடுத்து நடிக்க இருக்கும் படம் ‘வடசென்னை’. 'பொல்லாதவன்' படத்தின் மூலம் வடசென்னையின் ஒரு தோற்றத்தை காட்டிய இயக்குனர் வெற்றிமாறன், இந்த படத்தை ‘வடசென்னை’ என்ற பெயரிலேயே எடுக்கிறார். இதற்காக பல ஆண்டுகள் இந்த பகுதியைப் பற்றி தீவிர ஆய்வு நடத்தி இந்த கதையை தயாரித்துள்ளார்.

'வடசென்னை' படத்தில் தனுஷ் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இதற்காக 'வடசென்னை' பகுதியில் வாழும் குடிசைவாசி பெண்களுடன் தங்கி இருந்து பழகி அவர்களின் பேச்சு, நடைமுறை, உடல் அசைவுகள் போன்றவற்றை கற்றுக் கொள்ள முடிவு செய்திருக்கிறார்.

சமந்தா சென்னையில் பல்லாவரம் பகுதியில் பிறந்து, படித்து வளர்ந்த சென்னைவாசி. என்றாலும் 'வடசென்னை' படத்தில் இயல்பாக நடிப்பதற்காக இந்த பயிற்சி எடுக்கிறார்.

இதற்காக ‘வடசென்னை’ குடிசை பகுதியில் உள்ள வீட்டில் தங்குவதற்காக 10 நாட்கள் ஒதுக்கி இருக்கிறார். அப்போது மக்களோடு மக்களாக பழகி இந்த படத்துக்கு தன்னை தயார்படுத்துகிறார். சமந்தா எந்த இடத்தில் எந்த வீட்டில் எப்படி தங்குவார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions