நடிப்புக்கு தற்காலிக முழுக்கு போட்ட சமந்தா!

Bookmark and Share

நடிப்புக்கு தற்காலிக முழுக்கு போட்ட சமந்தா!

தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகி சமந்தா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தெறி, 24 படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

இப்போது தமிழில் வடசென்னை படத்தில் நடிக்க இருக்கிறார். தெலுங்கில் “ஜன்தா கேரேஜ்” படத்தில் நடித்து வருகிறார். இவை தவிர புதிய படங்கள் எதையும் சமந்தா ஏற்கவில்லை. நடிப்புக்கு தற்காலிகமாக முழுக்க போட்டுள்ளார். 

சமந்தா இதுபற்றி டுவிட்டரில், “என்னுடைய கோடை கால படங்கள் வெளியாகின்றன. இனி நிம்மதியாக தூங்குவேன். கடந்த 8 மாதங்கள் ஓய்வில்லாமல் உழைத்தேன். சோர்வான அந்த நாட்கள் முடிவடைந்து விட்டன. நான் சரியான மகளாகவும், தோழியாகவும் இந்த நேரத்தில் இல்லை. 

இனி சில விஷயங்களை மெதுவாக முடிவெடுக்கப் போகிறேன். கொஞ்ச நாளைக்கு புதுப்படங்களில் நடிக்க சம்மதிக்க போவதில்லை. எல்லாவற்றுக்கும் பக்கபலமாக இருக்கும் என் குடும்பத்தாருக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions