நானும் நல்லா நடிப்பேன்...சொல்வது சமந்தா...

Bookmark and Share

நானும் நல்லா நடிப்பேன்...சொல்வது சமந்தா...

தமிழ்த் திரையுலகில் இப்போதுதான் வெற்றிகரமான நடிகையாக கொஞ்சம் முன்னேறியிருக்கிறார் சமந்தா. ஆனால், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் அவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட்டாகவே ஓடியுள்ளன.

தமிழில் 'கத்தி' தான் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது. தற்போது விக்ரமுடன் '10 எண்றதுக்குள்ளே' படத்தில் நடித்து முடிக்கும் நிலையில் உள்ளார். இந்தப் படம் வந்தால் நானும் நல்ல நடிகைதான் என்பது அனைவருக்கும் புரியும் என்கிறார் சமந்தா.

சமீபத்திய பேட்டி ஒன்றில், “இதுவரை நான் சிறந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள படங்களில் நடிக்கவில்லை என்று சிலர் சொல்லி வருகிறார்கள்.

ஆனால், அதற்கெல்லாம் விக்ரமுடன் இணைந்து நடித்து வரும் '10 எண்றதுக்குள்ளே' படம் பதில் சொல்லும். இதுவரையில் நான் நடித்திருக்காத ஒரு கடினமான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளேன்.

இதுவரை என்னை வேறு எந்த கதாபாத்திரமும் இப்படிக் காட்டியதில்லை. என்னுடைய சிறந்த நடிப்பை இந்தக் கதாபாத்திரத்திற்காக வெளிப்படுத்தியிருக்கிறேன்.

இந்தப் படத்திற்குப் பின் நானும் நல்ல நடிகைதான் என்பதை நிரூபிப்பேன்,” என்கிறார் சமந்தா. மேலும், தன்னைப் பற்றி வரும் காதல் வதந்திகள் அனைத்தும் பொய்யானதுதான். அதைப் பற்றியெல்லாம் நான் கண்டு கொள்வதேயில்லை என்றும் சொல்லியிருக்கிறார். 


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions