சமந்தாவின் பியூட்டி சீக்ரெட்? : ஒரே ஒரு புரோட்டின் பவுடர் டப்பா!

Bookmark and Share

சமந்தாவின் பியூட்டி சீக்ரெட்? : ஒரே ஒரு புரோட்டின் பவுடர் டப்பா!

ஸ்கின் அலர்ஜி வதந்திகள் வந்தாலும் சமந்தாவின் அழகு மட்டும் ஆரம்பத்திலிருந்து குறையவே இல்லை.அது  யார் கிளப்பி விட்ட வதந்தியோ தெரியவில்லை.

ஆனால் அது சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் சொல்லியே மாய்ந்து விட்டார் அம்மணி.என்னோட ஸ்கின்னைப் பாருங்க எங்கேயாவது அசிங்கமா இருக்கான்னு சொல்லுங்க என்று நேரடியாகவே கேட்டு விடுகிறார் அந்த சந்தேகக் கேள்வி கேட்கும் நிருபர்களை.

பார்ப்பதற்கு பார்பி பொம்மை போல இருக்கும் சமந்தா ஆனால் நிஜத்தில் மேனிமை மட்டுமில்லாமல் உடம்பையும் அழகாக பேணி வருபவராம்.அவருடைய அந்த பாடி பெர்பக்‌ஷனுக்கு காரணமே ரெகுலர் ஜிம் ஒர்க் அவுட் தானாம்.

உடம்பை மெயிண்டெயின் செய்வதில் முன்பை விட அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் சமந்தா தினசரி உடற்பயிற்சியை மட்டும் விடுவதே இல்லை.ஷூட்டிங் இல்லாத சமயங்களில் ஜிம்மே கதியென்று கிடக்கும் அவர் ஷூட்டிங் இருக்கிற சமயங்களில் அதிகாலை 5 மணிக்கே அந்த வேலையை முடித்து விடுகிறார்.

கூடவே ஒரு புரோட்டீன் பவுடரும் சமந்தாவுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அந்த பவுடரால் தான் ஆள் பார்ப்பதற்கு செம அழகாக இருக்கிறாராம் சமந்தா.அப்போ சமந்தாவோட பியூட்டி ரகசியத்துக்கு ஒரே ஒரு புரோட்டின் பவுடர் டப்பா தான்  காரணமா?


Post your comment





Related News
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions