தனது ஆசையை கூறிய சமந்தா!

Bookmark and Share

தனது ஆசையை கூறிய சமந்தா!

‘‘ஓய்வே இல்லாமல் நடித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை’’ என்று சமந்தா கூறினார்.

இதுகுறித்து நடிகை சமந்தா ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

‘‘என் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. தமிழில் இரண்டு படங்களிலும் தெலுங்கில் இரண்டு படங்களிலும் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறேன். எப்போதும் படப்பிடிப்புகளிலேயே இருக்க வேண்டி உள்ளது. வீட்டுக்கு செல்ல முடியவில்லை.

இதனால் அவ்வப்போது குடும்பத்தினர் ஞாபகம் வந்து மனதுக்கு கவலையாய் இருக்கிறது. அவர்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.

எனக்கு வீட்டு ஞாபகம் வரும்போதெல்லாம் குலோப்ஜாமுன் சாப்பிடுவேன். உடனே வீட்டு கவலைகள் பறந்து போய்விடும். குலோப்ஜாமுன் சாப்பிட்டால் எப்படி வீட்டு ஞாபகம் இல்லாமல் போகிறது என்று என்னிடம் கேட்டால் பதில் சொல்ல முடியாது.

தமிழில் விஜய் ஜோடியாக நடிக்கும் ‘தெறி’ படமும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ‘24’ படமும் கோடையில் திரைக்கு வர இருக்கிறது. தெலுங்கிலும் இரண்டு படங்கள் வருகின்றன.

எல்லா படங்களிலுமே வித்தியாசமான கதாபாத்திரங்கள் அமைந்தன. ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்காது. இப்படி நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தது என்னுடைய அதிர்ஷ்டம். 

தனுசின் ‘வடசென்னை’ படத்திலும் நடிக்கிறேன். இந்த வருடம் அதிகமான படங்களில் நடிப்பதால் எனக்கு இது சிறப்பான ஆண்டாக அமைந்து இருக்கிறது. கடவுள் அருளும் எனக்கு நிறைய இருக்கிறது. தினமும் ஓய்வே இல்லாமல் நடித்துக்கொண்டு இருக்க வேண்டும். அதுதான் எனது ஆசையாக இருக்கிறது.

இவ்வாறு சமந்தா கூறினார்.


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions