சமந்தாவுக்கு மனநிறைவை கொடுத்த மனைவி வேடம்!

Bookmark and Share

சமந்தாவுக்கு மனநிறைவை கொடுத்த மனைவி வேடம்!

சாதாரணமாக மார்க்கெட்டில் இருக்கும் ஹீரோயினிகள் சற்று முதிர்ச்சியான வேடங்களில் நடிக்க வேண்டும் என்றாலே அலறிக்கொண்டு ஓடுவார்கள். இப்படி நடித்தால் எனது ஹீரோயின் இமேஜ் போய் விடும்.

அதன்பிறகு எல்லோருமே அக்காள், ஆன்ட்டி வேடங்களில் நடிக்கத்தான் கூப்பிடுவார்கள் என்பார்கள். ஆனால், அஞ்சானில் அதிரடி கிளாமரை வெளிப்படுத்தி நடித்த சமந்தா, அதையடுத்து விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள படத்தில் டபுள் ரோலில் மாறுபட்ட கோணத்தில் நடித்திருப்பவர், இப்போது வேல்ராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்து வரும் 'வேலையில்லா பட்டதாரி-2' படத்தில் தனுஷின் மனைவியாக நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு சமந்தாவை புக் பண்ண சென்றபோது, மனைவி வேடத்தில் அவர் நடிப்பாரா என்ற சந்தேகத்துடன் தான் சென்றார்களாம். ஆனால், கதையைக்கேட்ட சமந்தா, எனக்கு ஏற்கனவே தனுஷின் நடிப்பு ரொம்ப பிடிக்கும்.

அதிலும். இதுவரை படத்துக்குப்படம் காதலி வேடங்களாக நடித்து வந்த எனக்கு இந்த மனைவி கதாபாத்திரம் ஒரு மாறுதலாக உள்ளது. அதனால் இந்த படத்தில் தனுசுடன் மிக இயல்பாக நடிப்பேன் என்றாராம்.

அதனால், இப்போது அப்படத்தில் பழைய சாயல் எதுவும் இல்லாமல் மிக வித்தியாசமான பர்பாமென்ஸை கொடுத்து வரும் சமந்தா, பத்து எண்றதுக்குள்ள படத்தில் எப்படி வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறோனோ அதற்கு இணையாக இந்த படமும் என்னை வேறுபடுத்தி காட்டும்.

அதுவும் மனைவியாக நடிப்பது எனக்கு எப்படி புதுமையான அனுபவமாக இருக்குமோ அதேபோல் ரசிகர்களுக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று முழு மனநிறைவுடன் இந்த படத்தில் நடிக்கத் தொடங்கினாராம் சமந்தா.


Post your comment





Related News
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions