ஷுட்டிங் ஆரம்பித்தால்தான் சொல்வேன் - சமந்தா

Bookmark and Share

ஷுட்டிங் ஆரம்பித்தால்தான் சொல்வேன் - சமந்தா

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு சென்டிமென்ட் உண்டு. சென்டிமென்ட் பார்க்காமல்  ஒரு சிலர் மட்டும்தான் இருப்பார்கள். அதிலும் திரையுலகத்தில் இருக்கும் சென்டிமென்ட் பற்றி கேட்கவே வேண்டாம்.

ஒரு படத்திற்குத் தலைப்பு வைப்பதிலிருந்து தியேட்டர்களில் திரையிடுவது வரை சென்டிமென்ட் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். நடிகை சமந்தாவும் சென்டிமென்ட்டுக்குள் சிக்கியவர்தான் என்பதை சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

'கத்தி' படத்தின் வெற்றிக்குப் பிறகு விக்ரம் ஜோடியாக '10 எண்றதுக்குள்ள' படத்தில் நடித்து வரும் சமந்தா, அடுத்து தனுஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதன் பிறகு மீண்டும் விஜய் ஜோடியாக நடிக்க உள்ளார் என்று கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. 'ராஜா ராணி' படத்திற்குப் பிறகு அட்லீ இயக்க உள்ள அடுத்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளாராம். ஆனால், இது பற்றி சமந்தா இதுவரை வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. “இந்த வருடம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது.

படக் குழுவினர், கதைகள், கதாபாத்திரங்கள், கனவுக்கும் மேலாக நடக்கும் விஷயங்கள். என்னுடைய மோசமான சென்டிமென்ட் என்னவென்றால் ஒரு படம் ஷுட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்னால் அந்தப் படத்தைப் பற்றி சொல்ல மாட்டேன்.

இப்போது கூரை மீது ஏறி நின்று கத்த வேண்டும் போல் உள்ளது. நானும் இந்தப் படத்தின்............” என முற்றுப் பெறாத வாக்கியத்துடன் அவருடைய சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அது விஜய் படம்தானா அல்லது அஜித் படமா என்பது இனிமேல்தான் தெரிய வரும். 


Post your comment





Related News
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
சர்வதேச திரைப்பட விழாவில் மெர்சல் - ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions