கிச்சு கிச்சு மூட்ட வருகிறார் சமந்தா... சிரிக்க தயாரா இருங்க!

Bookmark and Share

கிச்சு கிச்சு மூட்ட வருகிறார் சமந்தா... சிரிக்க தயாரா இருங்க!

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் '24' படத்தில், சமந்தாவிற்கு நகைச்சுவையான கதாபாத்திரமாம். லிங்குசாமி இயக்கிய அஞ்சான் படத்தில் சூர்யா ஜோடியாக நடித்திருந்தார் சமந்தா.

அப்படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மாஸ்' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தைத் தொடர்ந்து விக்ரம் குமார் இயக்கத்தில் ‘24' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தனது 2டி நிறுவனம் மூலமாக சூர்யாவே இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல் பதிவு உள்ளிட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன.

இப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக சமந்தா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே இந்த ஜோடி அஞ்சானில் இணைந்து நடித்திருந்தனர்.மற்ற படங்களைப் போல ஹீரோவுடன் டூயட் பாடினோம் என்று மட்டும் இல்லாமல், இப்படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் பேசப்படும் விதத்தில் அமைக்கப் பட்டுள்ளதாம்.

அதிலும் குறிப்பாக சமந்தாவின் கதாபாத்திரம் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் என படக்குழுவினர் உத்திரவாதம் தருகின்றனர்.இதுவரை அழகு பதுமையாக, உணர்ச்சி பூர்வ கதாபாத்திரத்தில் மட்டுமே தமிழில் நடித்துள்ள சமந்தாவுக்கு இப்படம் வித்தியாசமான ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது.


Post your comment





Related News
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions