படங்கள் ஓடாவிட்டால் சம்பளத்தை குறைக்கிறார்கள்: சமந்தா வருத்தம்

Bookmark and Share

படங்கள் ஓடாவிட்டால் சம்பளத்தை குறைக்கிறார்கள்: சமந்தா வருத்தம்

சமந்தாவுக்கு தமிழ், தெலுங்கில் ஐந்து படங்கள் கைவசம் உள்ளன. இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். தமிழில் நடித்த படங்கள் வெற்றிகரமாக ஓடியதால் சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது. விக்ரம் ஜோடியாக நடிக்கும் ‘10 எண்றதுக்குள்ள’ என்ற படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

சம்பளத்தை உயர்த்தியது குறித்து சமந்தாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

கதாநாயகிகள் அதிகம் சம்பளம் வாங்குவதாக பலரும் பேசுகிறார்கள். ஆனால் சினிமா உலகுக்குள் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரிவது இல்லை. பேசியபடி சம்பளத்தை வாங்க முடிவதில்லை. ஓரிரு படங்கள் ஓடாவிட்டால் சம்பளத்தை குறைத்து விடுகிறார்கள்.

படங்கள் ஓடினால் சம்பளத்தை கூட்டுவது இல்லை. ஒரு படம் வெற்றி அடைவதற்கு அதில் நடித்த கதாநாயகிக்கும் பங்கு உண்டு. அதனை யாரும் நினைத்து பார்ப்பது இல்லை. கதாநாயகிகளை இளக்காரமாகத்தான் பார்க்கிறார்கள். இதையெல்லாம் வெளியில் சொல்லக்கூடாது. ஆனாலும் சொல்லி விட்டேன்.

இவ்வாறு சமந்தா கூறினார்.


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions