எங்கிட்ட நிறைய திறமை இருக்கு! - சமந்தா

Bookmark and Share

எங்கிட்ட நிறைய திறமை இருக்கு! - சமந்தா

கோலிவுட்டில் அறிமுகமானபோது பெரிதாக ரீச் ஆகாத சமந்தா, ஆந்திரா சென்று கவர்ச்சிக் கொடியேற்றினார். அதனால், ஓரிரு படங்களிலேயே அங்கு அவர் பேசப்படும் நடிகையாகி விட்டார்.

அதோடு, அவரது அதிரடி தாக்குதலினால் அதுவரை தெலுங்கில் பிசியாக இருந்த அனுஷ்கா, தமன்னா போன்ற நடிகைகள்கூட சறுக்கலை சந்தித்தனர். அதனால் அவர்கள் மார்க்கெட்டில் தாக்குப்பிடிப்பதற்காக கோலிவுட்டுக்கு இடம்பெயர்ந்து வந்தனர்.

ஆனால், அஞ்சானுக்குப்பிறகு மீண்டும் தமிழில் நடிக்கத்தொடங்கியுள்ள சமந்தா, கத்தியில் இன்னும் அழுத்தமாக கால் பதித்துக்கொண்டார். அதோடு, மற்றவர்களெல்லாம் அவரை கவர்ச்சி கண்ணோட்டத்திலேயே பார்க்க, விக்ரமுடன் அவர் நடித்துள்ள பத்து எண்றதுக்குள்ள படத்தில் சமந்தாவை இரண்டு வேடங்களில் நடிக்க வைத்துள்ளார் விஜய் மில்டன்.

ஒரு வேடத்தில் ஓரளவு கிளாமராக யூஸ் பண்ணினாலும். இன்னொரு வேடத்தில் சமந்தாவுக்குள் இருக்கும் நடிப்புத்திறமையை வெளிச்சம் போட்டிருக்கிறாராம். அதையடுத்து தான் நடித்த காட்சிகளைப்பார்த்து அசந்து விட்டாராம் சமந்தா.

மேலும், அவரது நடிப்பைக் கண்டு விக்ரமும் வியப்பை வெளிப்படுத்தினாராம். அதனால் உச்சி குளிர்ந்து போன சமந்தா, இப்போது தன்னிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்களிடம், எனது திறமைக்கு ஒரு நல்ல வாய்ப்பினை கொடுத்திருக்கிறார் விஜய் மில்டன்.

அதனால் இனிமேல் கவர்ச்சி நாயகியாக நடித்தாலும், என் நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் கதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன். அதனால் என்னிடம் நிறைய திறமை இருக்கு. அதை யூஸ் பண்ணிக்கொள்ளும் வகையில் கதாபாத்திரம் கொடுங்கள் என்கிறார் சமந்தா.


Post your comment





Related News
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
சர்வதேச திரைப்பட விழாவில் மெர்சல் - ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions