சென்னையில் நேபாள பெண்ணாக நடிக்கும் சமந்தா!

Bookmark and Share

சென்னையில் நேபாள பெண்ணாக நடிக்கும் சமந்தா!

பாணா காத்தாடி சமந்தா, அஞ்சான், கத்தி படங்களுக்குப்பிறகு மெகா நடிகையாகி விட்டார். தற்போது மேல்தட்டு ஹீரோக்களின் படங்களாக நடித்து வரும் அவர், தனுசுடன் நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி-2 படத்தில் குடும்பப்பெண்ணாக கிராமத்து கெட்டப்பில் நடித்திருக்கிறார்.

நகரத்து பின்னணியிலேயே வளர்ந்த சமந்தா, இதற்கு முன்பு சிட்டி கதைகளிலேயே அதிகமாக நடித்திருப்பவர் இந்த படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாக தனது நடை உடைகளை மாற்றி இயல்பாக நடித்திருக்கிறாராம். அதற்கு அந்த படத்தில் அம்மா வேடத்தில் நடித்துள்ள ராதிகா அவருக்கு கிராமத்து டிப்ஸ் நிறைய கொடுத்தாராம்.

மேலும், இதுதவிர விக்ரமுடன் நடித்துள்ள பத்து எண்றதுக்குள்ள படத்தில் முதன்முதலாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் சமந்தா, அதில் ஒரு வேடத்தில் நேபாளத்து பெண்ணாகவே நடித்திருக்கிறார்.

நேபாளம் பேசி நடிக்கும் இந்த வேடத்தில் நேபாளத்துக்கு பெண்களைப்போன்றே காஸ்டியூம் அணிந்து முழுமையாக தன்னை மாற்றி நடித்திருக்கிறாராம் சமந்தா. இந்த கேரக்டர் சம்பந்தப்பட்ட பாதி காட்சிகள் நேபாளத்தில் படமாக்கப்பட்ட நிலையில, மீதமுள்ள காட்சிகளை இன்னும் ஒரு வாரம் சென்னையில் நடத்துகிறார்களாம்.


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions