சம்பள விவகாரத்தில் உஷாராக இருக்கும் சமந்தா!

Bookmark and Share

சம்பள விவகாரத்தில் உஷாராக இருக்கும் சமந்தா!

பாணா காத்தாடி சமந்தா, அஞ்சான், கத்தி படங்களில் நடிப்பதற்கு முன்பு வரை தெலுங்கில்தான் அதிக படங்களில் நடித்துக்கொண்டிருந்தார்.

அதோடு அங்குள்ள நடிகைகளெல்லாம் துண்டு துக்கடாவுடன் ஆடிக்கொண்டிருக்கையில், சமந்தா மட்டும் ஒரு வட்டம் போட்டு அதற்குள் நின்றுதான் நடித்துக்கொண்டிருந்தார். அதனால் அவருக்கு நல்ல மவுசும் அங்கு இருந்தது. படத்துக்குப்படம் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே சென்றது.

இந்த நேரத்தில்தான் மீண்டும் கோலிவுட் சினிமா ஆசை தலைதூக்க லிங்குசாமியின் அஞ்சான் படத்தில் சூர்யாவுடன் நடித்தார். முதலில் சிறிதளவுதான் கிளாமர் என்றவர்கள் ஒவ்வொரு படியாக இறங்கி சமந்தாவை உரிச்ச கோழியாக்கி விட்டனர். அப்படி நடித்ததால்தான் சித்தார்த்-சமந்தாவிற்கிடையிலான காதல்கூட முறிந்து போனதாக அப்போது கூறப்பட்டது.

இப்படியிருக்க, தற்போது பத்து எண்றதுக்குள்ள, விஐபி-2, பிரமோற்சவம், 24, வடசென்னை, விஜய்யின் 59வது படம் என பல மெகா படங்களில் நடித்து வரும் சமந்தா, இந்த படங்களில் கவர்ச்சிக்கு கட்டுப்பாடு வைத்தே நடித்து வருகிறார்.

மேலும், கவர்ச்சியை குறைப்பதால் சம்பளத்தை குறைக்கக்கூடாது என்றும் கண்டிசனாக பேசி நடித்து வருகிறார். இந்த நிலையில், சில நிறுவனங்கள், பாதி சம்பளத்தை கொடுத்து விட்டு மீதியை அதோ இதோ என்று அலைய விடுவதும் நடக்கிறதாம்.

இதனால் ஆரம்பத்தில் மெகா ஹீரோக்களின் படங்கள் என்கிறபோது கொஞ்சம் விட்டுக் கொடுத்த சமந்தா, இப்போது கடைசி 4 நாட்கள் படப்பிடிப்பு இருக்கும்போதே மொத்த தொகையையும் கொடுத்து விட வேண்டும் என்று அட்வான்ஸ் வாங்கும்போதே கறாராக பேசி விடுகிறார்.

அப்படி மொத்த பணத்தையும் பைசல் செய்யாமல் யார் படப்பிடிப்புக்கு அழைத்தாலும் சமந்தாவின் செல்போன் சுவிட் ஆப் ஆகி விடுகிறதாம்.


Post your comment





Related News
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions