இவ்வளவு பணம் சேரும் என்று கனவில்கூட நினைத்து பார்க்கவில்லை- சமந்தா!

Bookmark and Share

இவ்வளவு பணம் சேரும் என்று கனவில்கூட நினைத்து பார்க்கவில்லை- சமந்தா!

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாகி விட்டார் நடிகை சமந்தா. சமந்தா விக்ரம் ஜோடியாக நடிக்கும் ‘10 எண்றதுக்குள்ள’ படம் அடுத்த மாதம் வெளியாகிறது. சூர்யாவுடன் ‘24’ என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஜோடியாக அட்லி படத்தில் நடிக்கவுள்ளார்.

மகேஷ் பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘பிரமோற்சவம்’ படத்திலும் கதாநாயகியாகிவிட்டார். மேலும் 4 படங்கள் கையில் வைத்துள்ளார். இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் சமந்தா சமூக சேவை பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 

இதுகுறித்து ஐதராபாத்தில் அவர் நிருபைகளுக்கு பேட்டி அளித்ததில், “ கடவுளின் ஆசீர்வாதம் எனக்கு நிறைய இருக்கிறது. அவரால்தான் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறேன். கடவுள் என்னை கதாநாயகியாக நல்ல இடத்தில் வைத்து இருக்கிறார். அதிகமான ரசிகர்களையும் எனக்கு சொந்தமாக்கி இருக்கிறார். 

நல்ல படங்கள் அமைகின்றன. ரசிகர்கள் மத்தியில் எனது படங்களுக்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது. நான் நடுத்தர வர்க்கத்துக்கும் கீழான சாதாரண குடும்பத்தில் இருந்துதான் வந்தேன். 

சிறு வயதில் ரொம்ப கஷ்டப்பட்டேன். இவ்வளவு பணம் சேரும் என்று கனவில்கூட அப்போது நினைத்து பார்க்கவில்லை. சமூக சேவை பணிகளில் எனக்கு சிறு வயதில் இருந்தே ஆர்வம் உண்டு. பண வசதி இல்லாத காலத்திலேயே என் அம்மா மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதை பார்த்து இருக்கிறேன். 

இப்போது என்னிடம் பணம் இருப்பதால் நானும் சமூக சேவை செய்கிறேன். நிறைய படங்கள் கைவசம் இருக்கிறது. எல்லாமே நல்ல கதையம்சம் உள்ள படங்கள். தமிழ், தெலுங்கில் அடுத்தடுத்து நான் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றாக வெளிவர இருக்கின்றன’’. இவ்வாறு சமந்தா தெறிவித்தார்.


Post your comment





Related News
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions