சமந்தா வைக்கும் தெண்டச்செலவு! : புலம்பித் தீர்க்கும் தயாரிப்பாளர்கள்

Bookmark and Share

சமந்தா வைக்கும் தெண்டச்செலவு! : புலம்பித் தீர்க்கும் தயாரிப்பாளர்கள்

சமந்தாவுக்கு இருக்கும் அழகுக்கு அவர் இந்நேரம் கோலிவுட்டில் டஜன் கணக்கில் படங்களை கையில் வைத்துக் கொண்டு பிஸியாக இருக்க வேண்டும். சரியான கைடன்ஸ் அவர் வசம் இல்லாததால் தெலுங்கு, தமிழ் என அங்கொன்றும் இங்கொன்றுமாய் படங்களை கமிட் செய்து நடித்து வருகிறார்.

நல்ல கதைகளை தேர்ந்தெடுப்பதை விட கதையே இல்லாத பெரிய ஹீரோக்களின் படங்களை மட்டுமே நம்பிய அவருக்கு கத்தியின் வெற்றி மட்டுமே ஆறுதலாக இருந்தது.அந்த ஒரு படத்தின் வெற்றியிலேயே தலைகால் புரியாமல் ஆடிக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள் அவரை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள்.

படப்பிடிப்பு வரும் சமந்தா கூடவே தனது மேக்கப் மேன், ஹேர் ட்ரஸர், அஸிஸ்டெண்ட் என அரை டஜன் ஆட்களை கூட்டி வந்து அவர்களுக்கும் தனியாக சம்பளம், பேட்டா என வாங்கிக் கொண்டிருந்தவர் இப்போது புதிதாத ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரு ஜிம் மாஸ்டரையும் கையோடு கூட்டி வரத் தொடங்கியிருக்கிறார்.

வீட்டில் இருந்தால் தனியாக உடற்பயிற்சி, யோகாசனம் என இறங்கும் சமந்தா படப்பிடிப்பு சமயங்களில் இந்த ஜிம் மாஸ்டரையும் அழைத்துக் கொண்டு அவர் மேற்பார்வையில் தான் மேற்படி உடற்பயிற்சி இத்யாதிகளை செய்கிறாராம்.

அப்படியானால் அந்த ஜிம் பார்ட்டிக்கு சமந்தா தானே சம்பளம் கொடுக்க வேண்டும். மாறாக இவர் என்னோட பிட்னஸ் கோச் என்று சொல்லி அவருக்கும் தனி ரூம், பேட்டா என தேவையில்லாத தெண்டச் செலவுகளை இழுத்து வைக்கிறாராம் சமந்தா.

ஹீரோவும், இயக்குனரும் சமந்தா தான் வேணும் என்று அடம்பிடிப்பதால் வேறு வழியில்லாமல் அவர் கேட்டதையெல்லாம் புலம்பியபடியே செய்து கொடுக்கிறார்களாம்.


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions