சென்னை தொழில் அதிபருடன் நடிகை சமந்தா காதல்?

Bookmark and Share

சென்னை தொழில் அதிபருடன் நடிகை சமந்தா காதல்?

தொழில் அதிபர் ஒருவருடன் சமந்தாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

சமந்தா, தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது விக்ரம் ஜோடியாக ‘10 எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் நடிக்கிறார்.

சமந்தாவும், சித்தார்த்தும் தெலுங்கு படமொன்றில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. சினிமா விழாக்களில் ஜோடியாக பங்கேற்றனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால், தற்போது இருவருக்கும் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். சித்தார்த் வேறு நடிகைகளுடன் நெருங்கி பழகியதாகவும், இதனாலேயே காதலை சமந்தா முறித்துக் கொண்டதாகவும் செய்திகள் பரவி உள்ளன.

இந்த நிலையில் சமந்தா தொழில் அதிபர் ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளதாக புது தகவல் வெளியாகி உள்ளது. அந்த தொழில் அதிபர் சென்னையை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இருவரும் ரகசியமாக சந்தித்து பேசுகிறார்கள். விரைவில் இந்த காதல் விவகாரம் அம்பலத்துக்கு வரும் என திரையுலக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. 


Post your comment





Related News
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions