திருமணத்துக்கு பிறகு சமந்தா சினிமாவை விட்டு விலக முடிவு!

Bookmark and Share

திருமணத்துக்கு பிறகு சமந்தா சினிமாவை விட்டு விலக முடிவு!

“எந்த துறையை எடுத்தாலும் எல்லோருக்கும் வெற்றிதான் குறியாக இருக்கிறது. அந்த வெற்றியை அடைவதற்கு போராட்டங்கள் அவசியம். இல்லாவிட்டால் கனவு உலகத்தில்தான் வாழ வேண்டி இருக்கும். போராடுபவர்களுக்குத்தான் இந்த உலகம் சொந்தம். சும்மா இருப்பவர்களுக்கு எதுவுமே சொந்தம் இல்லை.

நாம் வளர்ச்சிக்காகவும் உயர்வுக்காகவும் போராட துணியும்போது எதிர்மறை விளைவுகளை சந்திக்கலாம். சொந்தபந்தங்கள் விட்டுப்போகலாம், சிலர் துரோகிகளாகவும் மாறலாம். நமது தூக்கத்தை கூட இழக்கலாம். அதற்கெல்லாம் தயாராக இருந்து பயணத்தை தொடர்ந்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். சாதித்த பிறகு வெற்றிக்காக இழந்தது எல்லாம் திரும்ப கிடைத்து விடும். அதற்கு நானே உதாரணமாக இருக்கிறேன்.

நான் தற்போது ‘ஜனதா கேரேஜ்’ என்ற படத்தில் நடித்து உள்ளேன். இந்த படம் இரண்டு மொழிகளில் தயாராகி உள்ளது. மோகன்லால், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரும் நடித்துள்ளனர். இதன் பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன.”

இவ்வாறு சமந்தா கூறினார்.

சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இருவரும் தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் மலர்ந்தது. இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டனர். அடுத்த மாதம் நிச்சயதார்த்தத்தை நடத்த ஏற்பாடுகள் நடப்பதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது.

வருகிற டிசம்பர் மாதம் இவர்கள் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்துக்கு பிறகு சமந்தா சினிமாவை விட்டு விலக முடிவு செய்து உள்ளார். புதிய படங்களில் நடிக்க அவர் மறுத்து வருகிறார். ஏற்கனவே வட சென்னை படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க சமந்தாவை ஒப்பந்தம் செய்து இருந்தனர். தற்போது அந்த படத்தில் நடிக்க மறுத்து விலகி விட்டார். 


Post your comment

Related News
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions