எந்த படத்தையும் முதல்நாள் தியேட்டருக்கு சென்று பார்க்க மாட்டேன் -சமந்தா

Bookmark and Share

எந்த படத்தையும் முதல்நாள் தியேட்டருக்கு சென்று பார்க்க மாட்டேன் -சமந்தா

விஜய் சூர்யா தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்த சமந்தா அடுத்து தனது காதலரான நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகி விடுவார் என கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் விஷாலுடன் இரும்புத்திரை என்ற படத்திலும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்திலும் நடிக்க புக் ஆகிவுள்ளாராம்.

இந்நிலையில் தற்போது மீடியா பேட்டிகளிலும் ஆர்வம் காட்டி வரும் சமந்தா, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், இனிமேல் நான் எந்த படத்தையும் முதல்நாள் தியேட்டருக்கு சென்று பார்க்க மாட்டேன் என்று திடீரென அறிவித்துள்ளார். எதற்காக இந்த முடிவு? என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, நான் நடித்த தெறி, ஜனதா கேரேஜ் ஆகிய படங்கள் வெளியான முதல்நாளே தியேட்டருக்கு சென்று பார்த்தேன். அப்போது என்னுடன் படம் பார்த்தவர்கள் படம் சரியில்லை, ஓடாது என்றார்கள்.அதனால் நான் மனசுடைந்து விட்டேன்.

ஆனால் அப்படி அவர்கள் சொன்ன அந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டானது. அதன்காரணமாக இனிமேல் தான் நடிக்கிற படங்களை முதல்நாள் பார்க்கவே கூடாது என்று முடிவெடுத்துள்ளாராம்.

மேலும் மற்றவர்களின் கருத்துக்களை நம்பக்கூடாது என்றும் முடிவெடுத்துள்ளாராம்.


Post your comment





Related News
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions