சமந்தா, ஸ்ருதிஹாசன் இடையே கடும் போட்டி

Bookmark and Share

சமந்தா, ஸ்ருதிஹாசன் இடையே கடும் போட்டி

தமிழில் இப்போதைக்கு சமந்தா, ஸ்ருதிஹாசன் ஆகியோரிடையேதான் கடும் போட்டி நிலவுவதாக கோலிவுட்டில் சொல்கிறார்கள். இவர்கள் இருவரும்தான் அடுத்தடுத்த புதுப் படங்களைப் பிடிப்பதில் மிகவும் வேகமாக இருக்கிறார்களாம்.

சமந்தா தற்போது, விக்ரம் ஜோடியாக பத்து எண்ணுறதுக்குள்ளே சூர்யா ஜோடியாக 24 தனுஷ் ஜோடியாக  விஐபி 2 மற்றும் வட சென்னை மகேஷ் பாபு ஜோடியாக பிரம்மோற்சவம் விஜய் ஜோடியாக அட்லீ இயக்கும் படம் என தமிழில் மட்டும் 6 படங்களில் நடித்து வருகிறார்.

ஸ்ருதிஹாசன், விஜய் ஜோடியாக புலி அஜித்துடன் ஒரு படம், சூர்யாவுன் சிங்கம் 3 என கைவசம் 3 படங்களை வைத்திருக்கிறார். மேலும் பல முன்னணி ஹீரோக்களுடன் பேசி வருகிறாராம். தெலுங்குத் திரையுலகத்திலேயே சமந்தாவுக்கும், ஸ்ருதிஹாசனுக்கும் இடையேதான் எப்போதும் போட்டி இருந்து வருகிறது. முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க அவர்களிருவரும் போட்டி போடுவார்களாம்.

அந்தப் போட்டி இப்போது தமிழிலும் ஆரம்பித்துள்ளது. மேலும் சமீபத்தில் நடந்த ஃபிலிம்பேர் விருது விழாவில் சமந்தா நடித்த தெலுங்குப் படமான மனம் படத்திற்காக சமந்தாவிற்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்ருதிஹாசன் ரேஸ் குர்ரம் படத்திற்காக விருது வாங்கியுள்ளார்.

இது சமந்தா ரசிகர்களை வெறுப்படையச் செய்துள்ளதாம். சமூக வலைத்தளங்களில் ஸ்ருதி பற்றி அதிகமாகவே விமர்சனம் செய்து வருகிறார்கள். சமந்தாவும் விருது வாங்குவதைப் பற்றியும் கமென்ட் அடித்துள்ளார் என்றும் சொல்கிறார்கள்.


Post your comment





Related News
சமந்தா நடிக்க தடையா?
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
போட்டி இருந்தாலும் அவர் படம் தான் வெற்றி பெற வேண்டும் - சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முதல்முறை - சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை
சோக கவலையில் மூழ்கிய சமந்தா..! அதிரடி முடிவு ஆரம்பம்..!
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions